புதன், 30 மார்ச், 2011

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு

 தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழகங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!


  SONY DSC
சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நிரபராதிகளான முஸ்லிம்களின் புனர் வாழ்வுக்கு உதவுவோம்: தேசிய சிறுபான்மை கமிஷன்


header
அலிகர்:தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர் வாழ்வுக்காக உதவுவோம் என தேசிய சிறுபான்மை கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என பரிபூரணமாக சட்டரீதியாக உறுதிச் செய்யப்பட்டால் புனர்வாழ்விற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என கமிஷனின் தலைவர் வஜாஹத்  ஹபீபில்லாஹ் தெரிவித்துள்ளார்.
மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தனது கூட்டாளிகளுக்கு நேரடியான தொடர்புள்ளதுக் குறித்து அஸிமானந்தா வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து இவ்வழக்குகள் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் வஜாஹத் ஹபீபில்லாஹ்.

செவ்வாய், 29 மார்ச், 2011

செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடுசெல்பேசி பயன்படுத்துவதாலும், அதன் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செல்பேசி கோபுரங்களினாலும் நினைவிழப்பு, கவனச் சிதறல், ஜீரணக் கோளாறு, தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய அமைச்சரவைக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 22 மார்ச், 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8


தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம்.


மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7


அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம்.

இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை.


ஞாயிறு, 20 மார்ச், 2011

5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ


  610x
ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

சனி, 19 மார்ச், 2011

ஸ்ரீரங்கம் அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அங்குள்ள அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிராமணர்கள் நிறைந்துள்ள ஸ்ரீரங்கத்தில் இந்த முறை போட்டியிடவுள்ளார் ஜெயலலிதா. இதற்காக அவர் ஸ்ரீரங்கத்தில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

‘முஸ்லிம்களுக்கான பிரச்னை மாநில அளவிலானது அல்ல, தேசிய அளவிலானது!’ – SDPI மாநிலப் பொதுச்செயலாளர் தூது ஆன்லைனிற்கு அளித்த பேட்டி


Mubarak
“முஸ்லிம்களுக்கான பிரச்னை மாநில அளவிலானது அல்ல, தேசிய அளவிலானது!” என்று   SDPI மாநிலப் பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி SDPI வேட்பாளருமான நெல்லை முபாரக் அவர்கள் தூது ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தூது ஆன்லைனிற்கு அவர் அளித்த நேர்காணல் பின்வருமாறு
கேள்வி:“பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்”  என்ற “உடன்பாடான அரசியல்”  என்பதை முழக்கமாகக் கொண்டு உங்கள் ஆட்சி துவக்கப்பட்டுள்ளதே… பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்றால் என்ன?

வெள்ளி, 18 மார்ச், 2011

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
உங்களைச் சந்திக்க வேண்டும், வருகின்றோம் என்றோம் காலை 10 மணிக்கு. பகல் 12 மணிக்கு நேரம் கொடுத்தார்.
எப்போதும் சிலர் அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தார்கள். அதனால் தான் அவரால் கேட்டவுடன் நேரம் தந்திட இயலவில்லை.
சென்றோம் நானும் தேஜஸ் என்ற மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரும். நாங்கள் அவரது வீட்டைத் தேடிக் கொண்டிருந்த போது….,
எங்கள் பின்னால் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் வந்தார்கள். எங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல் கேட்டார்கள்: “பிலால் சாஹிப் அவர்களைப் பார்க்கவா?”

புதன், 16 மார்ச், 2011

பழகிய பொருள்... அழகிய முகம்! நீள கூந்தலுக்கு உளுத்தம் பருப்பு!

கண்ணுக்குக் குளிர்ச்சி, முகத்துக்கு மலர்ச்சி, கூந்தலுக்குப் பொலிவு, உடலுக்கு வலிமை கொடுக்கும் அழகு + ஆரோக்கிய ராணியான உளுத்தம் பருப்புதான் நம் அஞ்சறைப் பெட்டி அணிவகுப்பில் அடுத்து வருகிறாள்!

மென்மையான கூந்தலை விரும்புகிறவரா நீங்கள்? கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டால் முரட்டுக் கூந்தலும் பட்டுப்போல் மிருதுவாகும்!

15 முழு உ.பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய்த்தூளைக் கலந்துகொள்ளுங்கள்.

நாட்டு வைத்தியம் ! மாதவிலக்கு கால ஆலோசனை

"என்ன கோமதி! என்னாச்சு உடம்புக்கு? ஏதோ ஜீவனே இல்லாத மாதிரி நடந்து போறே?''

"வாங்க பாட்டி! உங்களை பார்க்கத்தான் வந்துக்கிட்டிருந்தேன்.''

"பாட்டி நினைப்பு வந்ததுன்னா ஏதோ பிரச்சினையில் இருக்கே! சரிதானா?"

"உண்மை தான் பாட்டி! நீங்க சொல்ற ஆலோசனை எங்களுக்கு எப்பவுமே பிரயோஜனமா இருக்கிறதால தான் உங் களை தேடிப்பிடிச்சி விஷயத்தை வாங்கறோம்.''

கேரள மாநில சட்டமன்றத் தேர்தல்: எஸ்.டி.பி.ஐ 98 தொகுதிகளில் போட்டி

imagesCAVIMY01
கோழிக்கோடு:வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி 98 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக 42 தொகுதிகளில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சேஷ்வரம், நேமம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள். அங்கு பா.ஜ.கவை தோற்கடிப்பதற்கான கொள்கை வகுக்கப்படும்.
40 தொகுதிகளில் கேரள தலித் சிறுத்தைகள், லோக் ஜனசக்தி கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை எஸ்.டி.பி.ஐ ஆதரிக்கும். இத்தகவலை கேரள மாநில எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

நன்றி:  www.thoodhuonline.com

அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்


  600px-US-FBI-Seal_svg_01
வாஷிங்டன்:தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.
மஸ்ஜிதுகளுக்கு வரும் முஸ்லிம்களை முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எஃப்.பி.ஐ என அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்(CAIR) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் தகவல்களை உடனுக்குடன் அளிக்குமாறு எஃப்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் புதிய அதிகாரிகளுக்கு இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் குறித்து தவறான புரிந்துணர்வு  நிலவும் சூழலில் அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் குறித்து CAIR கவலை தெரிவித்துள்ளது.
வெர்ஜீனியாவில் மஸ்ஜித் இமாமைக்குறித்து தகவல்களை சேகரிக்கும் ஏஜன்சிகள் அவருடைய தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக CAIR தலைவர் இப்ராஹீம் ஹூப்பர் தெரிவித்துள்ளார். சமூகத்தில் கலகத்தை உருவாக்குவதற்கே அரசின் நடவடிக்கைகள் உதவும் என இப்ராஹீம் ஹூப்பர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : www.thoodhuonline.com

செவ்வாய், 15 மார்ச், 2011

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – பதிப்புரை.

தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் “இலக்கியச் சோலை” வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர்.
அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம்.

அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபலமான அமெரிக்க நாளிதழ்கள் அதிக செல்வாக்கு படைத்தவை என்று சென்ற தொடரில் கண்டோம்.

தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் சதாம் ஹுஸைனைப் பற்றிய "கொடுமையான" செய்திகளை கதை கதையாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன் செய்தியாளர் ஜுடித் மில்லர் என்பவர்தான் WMD எனப்படும் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapon of Mass Destruction) ஈராக்கில் இருப்பதாக பல சிறப்புக் கட்டுரைகளை எழுதித் தள்ளினார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் வண்டி வண்டியாக பொய் மூட்டைகளைத் தாங்கி வெளிவந்தது.

ஏனெனில் அப்படி எந்தப் "பேரழிவு" ஆயுதமும் ஈராக்கிடம் இல்லை, ஜார்ஜ் புஷ் இந்தப் பொய்யைச் சொல்லியே ஈராக் என்னும் அருமையான பழம் பெரும் கலாச்சாரங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த நாட்டைக் குண்டுகள் போட்டு சீரழித்தார் என்று இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஞாயிறு, 13 மார்ச், 2011

மன ஊணமில்லா மணமகன் தேவை


 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(
அல்குர்ஆன் : 4:4)


வல்ல அல்லாஹ் மணமகளுக்கு

மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல

நீ கொடுக்க வேண்டிய மஹரை

பெண்ணான என்னிடம் கேட்க

நீ கேட்ட மஹரை கொடுக்க

என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்

தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

அந்நிய ஆக்கிரமிப்பு மதங்கள் இந்தியாவில்???இந்தியா - பல்வேறு மத,இன,மொழி,பண்பாடு, கலாச்சாரம், நிறம், வழிபாடு, என மனிதவாழ்வின் வகைப்படுத்தக்கூடிய பெரும்பாலான காரணிகள் அத்துனையிலும் வேறுபாடுகளை கொண்ட ஒரு பன்முக சமுதாயத்தின் தாய் நாடு.ஆனால் இத்துனை வேற்றுமைகளை கொண்ட மக்கள் ஒரு சமுதாயமாக வாழ்வதை உலகில் வேறெங்கும் காண முடியாது.இந்தியாவை உலகின் வேறெந்த நாட்டுடனும் ஒருபோதும் ஒப்பிட்டுவிட முடியாது....

புறப்பட்டுவிட்டார்கள் SDPI சட்டமன்ற தேர்தலில் வெற்றியை குவிக்க

சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு


சென்னை,மார்ச்.12:சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.

சனி, 12 மார்ச், 2011

OPENING FOR M/S. KAHRAMAA - QATAR GENERAL ELECTRICITY & WATER CORPORATION, QATAR


CLIENT INTERVIEW IN DUBAI ON END OF MARCH


ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் வெடி விபத்து-கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளது

Japan Fukushima Nuclear Power Plant
டோக்கியோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளில் இரண்டு உலைகளில் குளிரூட்டும் கருவிகள் செயல்படாமல் போனதால் வெப்பம் மிகவும் அதிகரித்து கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஈரானில் தொடக்கம்

நாளொன்றுக்கு 16 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிரம்மாண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அராக் பகுதியில் தொடங்குகிறது ஈரான்.
மத்திய ஈரானில் உள்ள அராக் பகுதியில் ஷாஸந்த் என்னுமிடத்தில் இவ்வாலை அமைந்துள்ளது. வளைகுடாவிலேயே பெரிய ஆலையாக இது அமையும்.  மேலும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் இந்த வாரம் ஈரான் திறக்கிறது.
உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடாக ஈரான் திகழ்கிறது. வல்லரசு நாடுகளின் பல்வேறு தடைகளையும்  தாக்குப் பிடிக்க இந்த எண்ணெய் வளமும் அதை ஈரான் பயன்படுத்தும் முறையும்தான் காரணமாக அமைகின்றது என்றால் மிகையில்லை.
கடந்த டிசம்பர் வரை 5 பில்லியன் பேரல்கள் பெட்ரோல் இருப்பாகக் கொண்டிருந்த ஈரான்  இப்போது,  புதிதாக இந்தப்  பெரிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் மிகப் பெரியது இந்த ஆலைதான். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயையும், பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இந்த ஆலை 16 மில்லியன் பேரல் எண்ணெயையும் சுத்திகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை

ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்


சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.

வெள்ளி, 11 மார்ச், 2011

முஸ்லீம் சமூகத்தினரால் எப்போதும் பிரச்சனை இருந்ததே இல்லை: அமெரிக்காஅமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தீர்வுக்கு வழி காண்பதில் நமக்கு உதவுவோராக உள்ளனர். அவர்களால் பிரச்சனை இல்லை என வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜெய்கார்னே கூறியுள்ளார்.அமெரிக்காவில் முஸ்லீம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெய்கார்னே கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு கிடையாது

சென்னை, மார்ச். 10-
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான அறிவிக்கையை தெரிவிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மாநில அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதாகவும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கைக்கு ஒப்புதல் இல்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தற்பேதைய நிலையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : கூடல்

இஸ்லாத்தை ஏற்க உதவிய இஸ்லாத்தின் எதிரி!

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அபூதர் அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார். அவர்களுக்கென்று அதிக அளவில் சொத்துக்கள் இல்லாவிட்டாலும் வியாபாரத்திற்க்காக தனது ஊரில் இருந்து பல மைல்கள் அப்பால் இருக்கின்ற மக்கா நகருக்கு பல வியாபார பொருட்களை சுமந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் போவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி வரும்போதெல்லாம் தனது நெருங்கிய நண்பரும், இஸ்லாத்தின் முக்கிய எதிரியாக திகழ்ந்த‌ அபூஜஹலின் வீட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவரின் மக்கா வருகையின் போது அபூஜஹல் அவரை அன்புடன் வரவேற்றாலும் அபூதர்க்கென்று எந்த ஒரு நன்மையையும் செய்தது இல்லை.

புதன், 9 மார்ச், 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 4


'டைம் வார்னர்' என்றொரு நிறுவனம். இது இன்னொரு முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம். இது 'டைம்' பத்திரிகை, HBO, CNN, அமெரிக்கா ஆன்லைன் ஆகிய செய்திச் சேனல்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.


மீடியா உலகில் முஸ்லிம்கள் – 3


மீடியா என்றால் உலகின் அனைத்துத் தரப்புச் செய்திகளும் அங்கே அங்கம் வகிக்கவேண்டும். எல்லோரது செய்திகளும் இடம் பெறவேண்டும். உலகின் நாலாபுறங்களிலிருந்தும் செய்திகள் பரிமாறப்பட வேண்டும். அனைத்து மக்களின் கலாச்சாரங்களும் அதில் பிரதிபலிக்க வேண்டும். எல்லா மக்களின் இன்பங்களும், துன்பங்களும் அங்கே பரிசீலிக்கப்படவேண்டும். எல்லா மக்களுக்கும் உகந்த பார்வையில் செய்திகள் சொல்லப்பட வேண்டும். இதுதான் மீடியா தர்மம்.


செவ்வாய், 8 மார்ச், 2011

பெண்மைக்கு எதிரான சவால்கள் - மகளிர்தின சிறப்புக் கட்டுரை


கருவறையிலிருந்து துவங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிலவும் இவ்வுலகில் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மை கடந்து செல்கிறது.

1978-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் விளைவாக உருவானதுதான் மகளிர் தினம்.


திங்கள், 7 மார்ச், 2011

வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்!!!

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கெட்டு 7000 ரூபாய்.

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

அரசியல் - மாத்தியோசி!


இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பைக் கொண்ட தேசம். மதசார்பற்ற, சோசியலிச விழுமியங்களைக் கொண்ட அரசியல் சட்டத்தை தன்னகத்தே கொண்ட நாடு.


புறப்பட்டுவிட்டது SDPI அரசியலை நமதாக்க ,தேசத்தைப் பொதுவாக்க

 
அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (YMCA வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை காலை 9 மணியளவில் மாநிலத் தலைவர் KKSM. தெஹ்லான் கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் SDPI-ன் செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.
பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு எழுச்சிப் பேரணி துவங்கியது. பேரணியை SDPI-ன் அகில இந்தியத் தலைவர் E.அபுபக்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

கத்தரில் நிதி திரட்டும் ஆர்.எஸ்.எஸ்

தோஹா,மார்ச்.7:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் ஏராளமான நாடுகளில் ரகசியமாக நிதியை திரட்டி வருகிறது. பல்வேறு இயக்கங்களின் திரைமறைவில் இத்தகைய நிதித்திரட்டும் பணி நடந்துவருகிறது.

இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காகத்தான் அவ்வியக்கம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரபல தலைவரான ஒ.கே.வாசு என்பவர் கத்தரின் பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நிதித் திரட்டுவதாக கத்தரில் வாழும் கேரள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

வியாபாரிகளிடமிருந்து இவர் வலுக்கட்டாயமாக நிதி திரட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற கேரள சட்டமன்றத் தேர்தலில் குஞ்சுபரம்பு என்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் பரிசீலனைக்குரிய நபராக இவர் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இவர் கத்தருக்கு நிதித்திரட்டுவதற்காக வருகைபுரிந்தார். அப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதால் நிதித்திரட்டுவதை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

உங்கள் தொகுதி - உங்கள் எம்.எல்.ஏ.!

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. இனி நாடே திருவிழாக் கோலம் ஆகும். இதுவரை ஏறிட்டுக்கூட பார்த்திராத உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இப்போது உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அளவளாவுவார்கள். கை கூப்புவார்கள். ஏன், காலில் கூட விழுவார்கள். சில தொகுதிகள் இதில் விதிவிலக்கு பெறும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருப்பார்கள். உண்மையிலேயே மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.

தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஏன் தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்காத எம்.எல்.ஏ.க்களை இந்த உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இனியும் உருவாக்காதீர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த, உருப்படியாக தங்கள் தொகுதிகளுக்கு ஏதாவது செய்த எம்.எல்.ஏ.க்களை நாம் இனம் காண வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

அதற்காக பாலைவனத்தூது ஆரம்பிக்கவிருக்கும் புதிய தொடர்தான் உங்கள் தொகுதி! - உங்கள் எம்.எல்.ஏ.!

ஆனால் வாசகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொடரை தொடர முடியாது.

வாசகர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியின் நிலவரம், உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடு, அவர்களால் உங்கள் தொகுதிக்கு ஏற்பட்ட வளர்ச்சி அல்லது பின்னடைவு... போன்றவற்றை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஒவ்வொரு தொகுதியையும் வாசகர்களாகிய உங்களின் மூலம் அலசி ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மட்டும் வெளியிடவுள்ளோம். இந்தத் தகவல்களை உங்கள் தொகுதியின் இன்னபிற மக்களும் அறிந்து விழிப்புணர்வு பெறுவார்கள். அத்தோடு சரியான நபருக்கு, சரியான கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள். முடிந்தால் புகைப்படங்களுடன் கூடிய விமர்சனங்களை எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

மறவாமல் உங்கள் தொகுதியின் பெயரையும்,உங்கள் எம்.எல்.ஏ.வின் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com

என்ன வாசகர்களே! தயாரா...?

நாட்டைக் காப்பாற்ற புறப்படுங்கள்! ஓட்டை வென்றெடுக்க ஒன்றுபடுங்கள்!!
 
 

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க!! அரும் மருந்து!!

இன்றைய காலகட்டத்தில் இரத்தக் குழாய் அடைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை எளிமையாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்க்கு அடுத்த பெரும் பிரச்சனை இரத்த அழுத்தம்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!


பிப்.28:கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.

புதன், 2 மார்ச், 2011

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.