நீங்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்.மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்.(அல் குரான்-8:46)
திங்கள், 7 பிப்ரவரி, 2011
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
உன் இரகசியம்! உன் சிந்தனைக்கு!
ஆம் இது உன்னை பற்றிய இரகசியம் தான் நீ சிந்திக்காதவரை அது உனக்கு தெரிவதில்லை.
மனிதனாக நாம் மண்ணில் பிறந்ததில் இருந்து இந்த நொடி வரை நல்லது கெட்டது இருப்பினும்,வாழ்க்கை இயல்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதன் பிறப்பது,வாழ்வதும் இறப்பதுமான வாழ்க்கை சக்கரம் நம் கண்முன்னே சுழன்று கொண்டேதான் இருக்கிறது.வாழ்க்கை போகும் வேகத்தில் "SURVIVAL OF THE FITTEST" என பொதுவாக விலங்குகளுக்கு சொல்லப்படும் வாசகம் மனிதனுக்கு கச்சிதமாக பொருந்தித்தான் போய் விட்டது.வாழ்க்கை போராட்டத்தில் ஜெயிக்க,அல்லது குறைந்தபட்சம் தோல்வியடையாமலாவது இருக்க நாம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.
சனி, 5 பிப்ரவரி, 2011
அழைக்கின்றது அபிராமம் நத்தம் கல்வி அறக்கட்டளை
![]() |
வியாழன், 3 பிப்ரவரி, 2011
பாவிப் பயலுக…!
அஸ்ஸலாமு அலைக்கும்
போன தடவ என் கடிதத்தை ஒங்க பத்திரிக்கையில (சமூக நீதி) அப்படியே போட்டுட்டிங்களாமே! எங்க பயலுக வந்து கத்திகிட்டு கெடந்தானுக. இனி என் மனசுல வர்ரது எல்லாத்தையும் எழுதரேன். நல்லார்ந்தா போடுங்க.
முந்தா நாளு என் ஊட்டுக்கு எங்க சொந்தக்காரங்க கும்பலா வந்தாங்க. அவங்க பொண்ணுக்கு கலியாணம் மூச்சி மூனு மாசமாகல, அதுக்குள்ள அந்த பாவிப்பய தலாக் உட்டுட்டானாம்! நம்ம சமுதாயத்துல இப்ப இதுமாதிரி நெறைய நடக்குதுங்க.
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.
யாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் ! (எச்சரிக்கை !)

அதிரைப்பட்டினத்து நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப் படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு "தொழுவதற்கு இடம்" கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
புதன், 2 பிப்ரவரி, 2011
எல்லாம் குழந்தைகளுக்காக...
வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்... இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம்.
சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்... இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக?
குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்
புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.
அப்துல் கலீம் பேசுகிறார்
ஹைதராபாத்,ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 2
சில வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தி ஹிந்து-ஃப்ரண்ட்லைன் அலுவலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
பிரமாண்டமான இடம். ஒரு பக்கம் அலுவலகம். இன்னொரு பக்கம் அச்சுக்கூடம். அலுவலகம் அத்துணை அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி. மனிதத் தலைகள் மட்டும் தெரியும் அரை கேபின் அறைகளிலுருந்து DTP தட்டச்சு செய்யும் சப்தம் மட்டும் தட் தட் என்று வந்துகொண்டிருந்தது.
பிரமாண்டமான இடம். ஒரு பக்கம் அலுவலகம். இன்னொரு பக்கம் அச்சுக்கூடம். அலுவலகம் அத்துணை அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி. மனிதத் தலைகள் மட்டும் தெரியும் அரை கேபின் அறைகளிலுருந்து DTP தட்டச்சு செய்யும் சப்தம் மட்டும் தட் தட் என்று வந்துகொண்டிருந்தது.
மீடியா உலகில் முஸ்லிம்கள் - 1

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)