வியாழன், 3 பிப்ரவரி, 2011

யாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் ! (எச்சரிக்கை !)



அதிரைப்பட்டினத்து நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப் படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு "தொழுவதற்கு இடம்" கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

புதன், 2 பிப்ரவரி, 2011

எல்லாம் குழந்தைகளுக்காக...


வெள்ளைமுடி, கன்னத்தில் சுருக்கம், மெலிந்த தேகம், உடமை என்று சொல்லிக் கொள்ள வியாதிகள், குடும்பத்தை பிரிந்து வெகு தொலைவில்... இரவு பகல் பாராமல், வெயில், குளிர் என வேற்றுமை பாராட்டாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலரை நாம் தினந்தோறும் கண்டுவருகிறோம்.

சம்பாதிப்பதே அரை சாண் வயிற்றுக்குதான் என்றாலும் இவர்களில் பலர் நேரத்திற்கு உணவருந்துவதில்லை. மாத இறுதியில் கிடைக்கும் சம்பளத்திற்காக முன்பின் தெரியாதவர்களிடம் ஏச்சுகளையும் பேச்சுகளையும் கேட்கும் அவலம்... இவை அனைத்தையும் இவர்கள் சகித்து செல்வதற்கு எதற்காக?

குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்


புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அப்துல் கலீம் பேசுகிறார்


ஹைதராபாத்,ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 2

சில வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தி ஹிந்து-ஃப்ரண்ட்லைன் அலுவலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரமாண்டமான இடம். ஒரு பக்கம் அலுவலகம். இன்னொரு பக்கம் அச்சுக்கூடம். அலுவலகம் அத்துணை அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி. மனிதத் தலைகள் மட்டும் தெரியும் அரை கேபின் அறைகளிலுருந்து DTP தட்டச்சு செய்யும் சப்தம் மட்டும் தட் தட் என்று வந்துகொண்டிருந்தது.

மீடியா உலகில் முஸ்லிம்கள் - 1

முஸ்லிம் தொழிலதிபர்கள் வியாபாரத்திலோ, இன்னபிற தொழில்துறைகளிலோ மட்டும் கவனம் செலுத்தி வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று சமுதாயத்தில் மிகப் பலமுள்ள மீடியாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடிய தொலைக்காட்சி ஊடகத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை



ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,