திங்கள், 7 மார்ச், 2011

உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

கத்தரில் நிதி திரட்டும் ஆர்.எஸ்.எஸ்

தோஹா,மார்ச்.7:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் ஏராளமான நாடுகளில் ரகசியமாக நிதியை திரட்டி வருகிறது. பல்வேறு இயக்கங்களின் திரைமறைவில் இத்தகைய நிதித்திரட்டும் பணி நடந்துவருகிறது.

இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காகத்தான் அவ்வியக்கம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரபல தலைவரான ஒ.கே.வாசு என்பவர் கத்தரின் பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நிதித் திரட்டுவதாக கத்தரில் வாழும் கேரள மக்கள் புகார் அளித்துள்ளனர்.

வியாபாரிகளிடமிருந்து இவர் வலுக்கட்டாயமாக நிதி திரட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற கேரள சட்டமன்றத் தேர்தலில் குஞ்சுபரம்பு என்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் பரிசீலனைக்குரிய நபராக இவர் உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இவர் கத்தருக்கு நிதித்திரட்டுவதற்காக வருகைபுரிந்தார். அப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதால் நிதித்திரட்டுவதை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

உங்கள் தொகுதி - உங்கள் எம்.எல்.ஏ.!

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. இனி நாடே திருவிழாக் கோலம் ஆகும். இதுவரை ஏறிட்டுக்கூட பார்த்திராத உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இப்போது உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அளவளாவுவார்கள். கை கூப்புவார்கள். ஏன், காலில் கூட விழுவார்கள். சில தொகுதிகள் இதில் விதிவிலக்கு பெறும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருப்பார்கள். உண்மையிலேயே மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.

தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஏன் தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்காத எம்.எல்.ஏ.க்களை இந்த உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இனியும் உருவாக்காதீர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த, உருப்படியாக தங்கள் தொகுதிகளுக்கு ஏதாவது செய்த எம்.எல்.ஏ.க்களை நாம் இனம் காண வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

அதற்காக பாலைவனத்தூது ஆரம்பிக்கவிருக்கும் புதிய தொடர்தான் உங்கள் தொகுதி! - உங்கள் எம்.எல்.ஏ.!

ஆனால் வாசகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொடரை தொடர முடியாது.

வாசகர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியின் நிலவரம், உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடு, அவர்களால் உங்கள் தொகுதிக்கு ஏற்பட்ட வளர்ச்சி அல்லது பின்னடைவு... போன்றவற்றை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஒவ்வொரு தொகுதியையும் வாசகர்களாகிய உங்களின் மூலம் அலசி ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மட்டும் வெளியிடவுள்ளோம். இந்தத் தகவல்களை உங்கள் தொகுதியின் இன்னபிற மக்களும் அறிந்து விழிப்புணர்வு பெறுவார்கள். அத்தோடு சரியான நபருக்கு, சரியான கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள். முடிந்தால் புகைப்படங்களுடன் கூடிய விமர்சனங்களை எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

மறவாமல் உங்கள் தொகுதியின் பெயரையும்,உங்கள் எம்.எல்.ஏ.வின் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com

என்ன வாசகர்களே! தயாரா...?

நாட்டைக் காப்பாற்ற புறப்படுங்கள்! ஓட்டை வென்றெடுக்க ஒன்றுபடுங்கள்!!
 
 

இரத்தக் குழாய் அடைப்பு நீங்க!! அரும் மருந்து!!

இன்றைய காலகட்டத்தில் இரத்தக் குழாய் அடைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை எளிமையாக தவிர்த்து விடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்க்கு அடுத்த பெரும் பிரச்சனை இரத்த அழுத்தம்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

கண்ணீர் கடலில் தத்தளித்த அந்த 9 வருடங்கள்!' - அபலைத் தாய் பீபி காத்தூனின் கண்ணீர் பேட்டி!


பிப்.28:கடந்த 2002ம் ஆண்டு, அயோத்தியில் கரசேவை முடித்து விட்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் திரும்பிய 59 கரசேவகர்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.

புதன், 2 மார்ச், 2011

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.