நீங்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்.மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்.(அல் குரான்-8:46)
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
மோடி ஆதரவு கருத்து: தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!
சவூதி அரேபியா:ஜித்தாவில் பெருவெள்ளம் - 4 பேர் மரணம் - கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்
ஜித்தா,ஜன.29:கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெருமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர். முக்கிய சாலைகளெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதிபோல் காட்சியளித்தன. இதனால் மக்கள் வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கடைகளில் ஒதுங்கினர்.

இரு நாடு கருத்துக்கு முதலில் வித்திட்டவர் சாவர்க்கர்தான், ஜின்னா அல்ல - திக்விஜய்சிங்
டெல்லி,ஜன.29:இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.
செவ்வாய், 25 ஜனவரி, 2011
இஸ்லாம் - கட்டாய மதமாற்றம்
மதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.
லேபிள்கள்:
இஸ்லாம்,
மதநல்லிணக்கம்,
மதமாற்றம்
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
கர்நாடகாவில் ஆளும் கட்சியான பா.ஜா.க. நடத்திய வன்முறை மற்றும் கொள்ளை
அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு
லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.
தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

சனி, 22 ஜனவரி, 2011
ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை தாரா சிங்குக்கு தூக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது.
இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)