திங்கள், 7 பிப்ரவரி, 2011

செவி சாய்ப்போம்



சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உன் இரகசியம்! உன் சிந்தனைக்கு!

ஆம் இது உன்னை பற்றிய இரகசியம் தான் நீ சிந்திக்காதவரை அது உனக்கு தெரிவதில்லை.
மனிதனாக நாம் மண்ணில் பிறந்ததில் இருந்து இந்த நொடி வரை நல்லது கெட்டது இருப்பினும்,வாழ்க்கை இயல்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.மனிதன் பிறப்பது,வாழ்வதும் இறப்பதுமான வாழ்க்கை சக்கரம் நம் கண்முன்னே சுழன்று கொண்டேதான் இருக்கிறது.வாழ்க்கை போகும் வேகத்தில் "SURVIVAL OF THE FITTEST" என பொதுவாக விலங்குகளுக்கு சொல்லப்படும் வாசகம் மனிதனுக்கு கச்சிதமாக பொருந்தித்தான் போய் விட்டது.வாழ்க்கை போராட்டத்தில் ஜெயிக்க,அல்லது குறைந்தபட்சம் தோல்வியடையாமலாவது இருக்க நாம் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

பாவிப் பயலுக…!

அஸ்ஸலாமு அலைக்கும்
போன தடவ என் கடிதத்தை ஒங்க பத்திரிக்கையில (சமூக நீதி) அப்படியே போட்டுட்டிங்களாமே! எங்க பயலுக வந்து கத்திகிட்டு கெடந்தானுக. இனி என் மனசுல வர்ரது எல்லாத்தையும் எழுதரேன். நல்லார்ந்தா போடுங்க.
முந்தா நாளு என் ஊட்டுக்கு எங்க சொந்தக்காரங்க கும்பலா வந்தாங்க. அவங்க பொண்ணுக்கு கலியாணம் மூச்சி மூனு மாசமாகல, அதுக்குள்ள அந்த பாவிப்பய தலாக் உட்டுட்டானாம்! நம்ம சமுதாயத்துல இப்ப இதுமாதிரி நெறைய நடக்குதுங்க.

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்


உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

தாய்மார்களே உஷார் !


சமீபத்தில் மிகப் பிரபலமான ஒரு வாரப் பத்திரிக்கையில் “மம்மி வேண்டாம் டிவி போதும்” என்ற எச்சரிக்கை கட்டுரையைப் படித்ததும் சில விஷயங்களை அதிலிருந்து உள்வாங்கி அதோடு நமது வட்டார மொழியுடன் கோடிட்டும் காட்டிடத்தான் இதனை பதிகிறேன்.

யாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் ! (எச்சரிக்கை !)



அதிரைப்பட்டினத்து நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப் படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு "தொழுவதற்கு இடம்" கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.