கொல்கத்தாவில் 14 விமானங்களும், கேரளாவில் 12 விமானங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவின் 225 உள்நாட்டு விமானசேவையில் 40 சேவைகள் மட்டுமே தற்போது நடைபெறுவதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியாவுடன் இணைந்து சேவைபுரியும் அலையன்ஸ் ஏரின் 100 விமானங்கள் சர்வதேச சேவையை முடங்காமல் புரிந்துவருகின்றன.டெல்லியிலிருந்து 21 விமானங்கள் விமானச்சேவையை புரிந்தாலும், மும்பையில் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது.700 விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏர் இந்தியாவின் விமானசேவை ஸ்தம்பித்துப்போனதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனியார் விமான சேவைகள் பயணிகள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.மும்பையிலிருந்து கிங் பிஷர் விமானத்தில் டெல்லி செல்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் 27,601 ஆகும்.
அதேவேளையில், போராட்டத்தை எதிர்கொள்ள கிங் பிஷர் போன்ற தனியார் விமானசேவைகளில் பணிபுரியும் விமானிகளை பயன்படுத்தி ஏர் இந்தியாவின் விமானசேவையை தொடர மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சகம் ஆலோசித்துவருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமானிகளுக்கு சம்பளம் அளிக்கவேண்டியதில்லை என அமைச்சகம் தீர்மானித்துள்ளது.கிங் ஃபிஷர் விமான சேவையின்16 ஏர்பஸ் விமானங்கள் மராமத்துப்பணிகள் காரணமாக சேவை நடத்துவதில்லை.இந்த விமானிகளை ஏர் இந்தியாவில் தற்காலிகமாக உபயோகிக்கவும் அரசு ஆலோசித்துவருகிறது.
நன்றி : தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக