உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல் , மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மருத்துவம்(MBBS, BDS) , பொறியியல் (B.EB.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும் வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை, அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை கொடுக்கலாம்.
நீங்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்.மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்.(அல் குரான்-8:46)
சனி, 30 ஏப்ரல், 2011
வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)
ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு
கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.
புதன், 27 ஏப்ரல், 2011
மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்
புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தெளிவுப்படுத்துகிறது. இனப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு(எஸ்.ஐ.டி) தாங்கள் மோடியின் பணியாளர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.
கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்தியா மெத்தனம்!-விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே
சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது. இதனை மீட்க வேண்டும் என பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?
அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400 வருடங்களாக இன்னும் சொல்லப் போனால், பெண்களை இன்னும் போகப் பொருளாகவும், கடைச்சரக்காகவும், பண்டமாற்றைப் போலவும் அவர்களை நடத்தி வரும் சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் அவர்களை எந்தளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளது என்பது புரிய வரும். இஸ்லாம்
ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்
புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை:மோடியின் பங்கினை வெளிப்படுத்திய சஞ்சீவ் பட் உயிருக்கு அச்சுறுத்தல்
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பங்கினை வெளிப்படுத்திய மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
போதுமான பாதுகாப்பை வழங்கவேண்டுமென 3 தடவை கோரிக்கை விடுத்த பிறகும் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அவரை அலைக்கழிக்கிறது குஜராத் அரசு.
டெல்லியில் வக்ஃப் கட்டிடங்களின் வாடகை ஒரு ரூபாய் முதல் 11 வரை
புதுடெல்லி:கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய் முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் நிஜாமுத்தீன், கரோல்பாக், பஹார்கஞ்ச், சப்ஜிமண்டி, பல்லிமாரன், மாத்தியமஹல், பழைய டெல்லியின் வீதிகள் உள்ளிட்ட இடங்களிலுள்ள வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 86 கட்டிடங்களுக்கு மாதாந்திர வாடகையாக 1 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
காவிமயம்:குஜராத்தின் வழியை பின்பற்றும் மத்திய பிரதேசம்
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.
2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மோடி ஆட்சியில் தொடரும்வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது – காங்கிரஸ்
புதுடெல்லி:கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனப் படுகொலைக்கு மோடி உடந்தை என மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுத்தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திங்கள், 25 ஏப்ரல், 2011
ஒரு கடவுளின்??? மரணம்...
பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது:
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 . கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
புனித வெள்ளியும் பல நூற்றாண்டு பொய்யும்!

சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு
சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு வரை எல்லாமே போலி!
சனி, 23 ஏப்ரல், 2011
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்
அஹ்மதாபாத்:2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கொடூரமான முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குண்டு என உயர் போலீஸ் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இனப் படுகொலையின் மூலமாக ஹிந்துக்களின் கோபத்தை தணிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் மோடி மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தினார் என சுட்டிக்காட்டி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் சமர்ப்பித்துள்ளார்.
மார்ச்-8 உலக மகளிர் தினம் - N.W.F நடத்திய பேரணி

இப்பேரணிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரி. நஜ்மா அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபாத்திமா கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளல் ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றி பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்துல் நாஸர் மஃதனி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
வியாழன், 21 ஏப்ரல், 2011
மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10
இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம்.
இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது. ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து, அது தன் வளர்ச்சியைத் தொடங்கிய பொழுதே இந்தச் சிலுவைகள் அங்கே தமது ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டன. அங்கே என்ன கலாச்சாரம் நிலவ வேண்டும், என்ன பண்புகள் மிளிர வேண்டும் என்று அவைதாம் தீர்மானித்தன. அந்த ஆரம்ப காலகட்டத்திலேயே அவை இஸ்லாத்தின் மீது தாம் கொண்ட தீராப் பகையைப் பறை சாற்றும் விதமாக இஸ்லாம் விரோதக் கொள்கைகளை விஷ விதைகளாகத் தூவிற்று.
மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்
10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வு முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். ஆண்டு விடுமுறையாக 6 முதல் 10 வாரம் வரை மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?
விடுமுறை நாள்களில் என்ன பண்ணலாம்?
சனி, 16 ஏப்ரல், 2011
பதிவுத்துறை ஐ.ஜியை அவமதித்த சம்பவம்: பசுச்சாண தண்ணீர் தெளித்தது தடவியல் பரிசோதனையில் நிரூபணம்
திருவனந்தபுரம்:கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக பதவிவகித்தவர் ஏ.கே.ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள்,வாகனம் ஆகியவற்றின் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது.
துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ மற்றும் தி.மு.கவினரிடையே மோதல்!
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்ற 13ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவது நடைபெற்றது. ஒரு சில இடங்களில் தவிற மற்ற அனைத்து இடங்களிலும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நமது துறைமுகம் தொகுதியில் கொண்டித்தோப்பு, சிவனங்கன் பூங்கா அருகில் ராமகிருஷ்ணா பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஆளூம் தி.மு.கவினர் கள்ள ஓட்டுப்போடுவதாக தகவல் கிடைத்ததும் எஸ்.டி.பி.ஐன் உறுப்பினர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக கொண்டித்தோப்பிற்கு விரைந்து சென்றனர்.
வியாழன், 14 ஏப்ரல், 2011
Kuwait : Electrical Engineer / Technician Freshers (For Oil & Gas Projects) Final Interview at Chennai on 20th April 2011
Please send your resume to apply@agpindia.com
Greetings from AGP International Services.
Sub : Recruitment for Fresher’s (Good Opportunity to enter in to Oil & Gas Projects)
About us : A leading 25 years old government recognized overseas recruitment consultant, plays key role for recruiting the Professionals for the projects like Construction, EPC, Hospitality, Healthcare, Telecom, FMGC, MEP etc, to know more further, visit www.agpindia.com
About our Client : A Leading group of company in Saudi Arabia involved in Oil & Gas Project for their operation in Kuwait
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
தேர்தல் 2011 - முஸ்லீம்கள் செய்யவேண்டியதென்ன??
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே...அமீரகத்துல இருந்தாலும்,நம்ம தமிழக தேர்தல் வாடை நம்மை தாக்காமல் இல்லை.இந்தா அந்தான்னு கருணாநிதி ஆட்சிக்கு வந்து,நல்லது கெட்டது,ஊழல்,அது இதுன்னு ஐந்து ஆண்டு முடிஞ்சு அடுத்த தேர்தலுக்கு தயாராகி,கடுமையா உழைச்சுக்கிட்டு இருக்காங்க எல்லாம்...அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடித்தளத்தை எல்லாக் கட்சிகளுமே வழுவாக முதலீடு செய்து கொண்டிருக்கும் நேரம் இது.
சமீபத்தில்,இல்லை இல்லை நீண்ட காலமாகவே ஓட்டுக்கு பணம், பொருள்கள்,சாப்பாடு,சாராயம் என நீண்ட லஞ்ச வரலாறு நமக்கு தெரிந்த வரை தமிழகத்தில் உண்டு.ஒரு கட்சிக்காரர் வந்து எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லி பணமோ,பொருளோ,அல்லது இன்னபிறவற்றையோ கொடுத்துச் சென்றால் மக்கள் அந்த நன்றியை தங்களது ஓட்டின் மூலம் செலுத்தி தங்களின் விசுவாசத்தை காட்டிவிடுவார்கள் என்பது அரசியல் வாதிகளின் நம்பிக்கை.அது ஓரளவுக்கு உண்மையானதும் கூட.
நம்ம நாட்டோட தேர்தல் பத்தி கவுண்டர் என்ன சொல்றார்ன்னா...
பாத்தீங்களா?...
இது குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் இதில் கைதேர்ந்தவர்களாக இருப்பது ஊடகங்கள் நமக்கு அறியத்தரும் செய்தி.அதற்காக மற்ற கட்சிகளெல்லாம் காந்தியவாதிகள் என எண்ணுவது முட்டாள் தனம்.அவர்களும் அவர்களின் திராணிக்கு,வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
JOKES APART..ஓட்டுப்போட தயாராக இருக்கும் குடிமக்கள் சிலவற்றை சிந்திக்கவும்,அதன்படி முடிவு செய்யவும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.ஓட்டு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமை.அதை ஸ்திரமாக பயன்படுத்தினால் நாடும் வீடும் சுபீட்சம் பெருவது உறுதி.
ஹைர்(நல்லது),,..போகட்டும்.காலங்காலமாக முஸ்லீம்களும் இம்மாதிரியான தேர்தல்களை சந்தித்துத்தான் வருகிறோம்.இஸ்லாமிய மக்களுக்கு பிரதான கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை தருவதும்,அதில் சில கிட்டியும்,பல கிட்டாமல் போவதும் பழகிப்போய்விட்ட ஒன்றாகிவிட்டது.
இஸ்லாமிய கட்சிகளும் காலாகாலமாக இல்லாமல் இல்லை.நல்லோர்கள் ஆரம்பித்த தலைசிறந்த கட்சிகள் எல்லாம் தன் சுயத்தை இழந்து இன்று திராவிட கட்சிகளின் அங்கமாகிப்போனது வருந்தத்தக்க செய்தி.அதனால் அவர்கள் இஸ்லாமியர்கள் மத்தியில் மதிப்பிழந்து போனதும் உண்மை.
அது தவிர,கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பாக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்களை பல்வேறு காரணங்கள்,கொள்கைகள், தேவைகளை முன்னிறுத்தி முஸ்லீம்கள் கண்டுகொண்டனர்.அவையவை தனக்கென குறிப்பிட்ட உறுப்பினர்களை கைகொண்டு,ஒன்றையொன்று சாராமல்,தன் பாதையில் சென்று கொண்டிருக்க காண்கிறோம்.
வளச்சியடைந்த இயக்கங்கள்,தன்னை போன்ற சகோதர இயக்கத்தை திட்டித்தீர்ப்பதும்,வஞ்சிப்பதும்,கேவலப்படுத்துவதும்,காட்டிக்கொடுப்பதுமான அரசியலில் இறங்கிவிட,அதைக்கடந்து அவரவர் பலத்தை நிரூபிக்க அவர்கள் நிஜ அரசியலையும் நாடவேண்டியதானது.சிலர் நேரடியாக அரசியல்களம் காணவும்,சிலர் அரசியல் ஆதரவு தரவுமாக தத்தனது சக்தியை காட்ட முனைகிறார்கள்.
இப்படியாக முஸ்லீம்களின் நிலை இருக்க,இது எந்த வகையில் முஸ்லீம்களுக்கு நன்மை பயக்கும் என்றால்...யோசித்துப்பார்த்தால் எவ்வகையிலும் நன்மை என்பது துளியும் இல்லை.மாறாக பாதகங்கள் அதிகம் நம் பக்கம் வந்துகொண்டிருக்கிறது...
இத்தகைய பிரிவினைகளால் முஸ்லீம்களின் ஓட்டு சிதறிவிடுகிறது.சிதறிய ஓட்டுக்களை கட்சிகள் பிரித்துக் கொள்கின்றன.நமக்கு வெறும் கையை காட்டிவிடுகின்றன.இத்தகைய சூழலே நிகழவேண்டியே இந்த அரசியல்கட்சிகள் விரும்புகின்றன.அப்போதுதான் முஸ்லீம்கள் தனிப் பெரும்பான்மையை காட்டமுடியாது,அவ்வாறு அவர்கள் காட்டினால் அவர்களின் ஓட்டு கண்டிப்பாக நமக்கு இல்லாமல் ஆகிவிடும் என்பது அவர்களுக்கு தெரியும்.
ஆக நாம் கடக்க இருக்கும் இந்த தேர்தலில் முஸ்லீம்களான நமது பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்து அதன்படி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்.சமீபத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள SDPI சேர்ந்த நமது சகோதரர்கள் நம்மிடம் ஆதரவு வேண்டி வந்திருந்தனர்.பின் அவர்களை நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
அவர்கள் என்னப்பா இது,இப்படி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு அவன் அவன் தனித்தனியா கொடி புடிச்சுக்கிட்டு இருக்கீங்க..இதுல ஒருத்தர் ஒருத்தர தோக்கடிக்க சபதம் போட்டு வேர உழைக்கிறீங்க..இப்படி இருக்கைல,நா நம்ம சகோதரர்களுக்கு ஓட்டு போட்டு,எல்லா 5,10 ஓட்டுக்கள பிரிச்சு,யாருக்கு என்ன ஆகப்போகுது?..உங்களால முஸ்லீம்களுக்கு எந்த அரசியல் ஆதாயத்தையும் தரமுடியாது.முதல்ல,எல்லா இயக்கங்களையும் ஒன்னு சேருங்க..அப்ரம் எல்லா ஒன்னு சேந்து முழு ஆதரவோட களம் இறங்கினால் கண்டிப்பா வெற்றி கிடைக்கும்,அப்டீன்னார்.....இன்னும் நெரையாவே சொன்னார்..அதில் சில விதண்டாவாதங்களும் இருந்தன...
ஆனால் அவரது பேச்சை முழுமையாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.ம்ம்.நாமும் இப்போது வரை அனைத்து இயக்கங்களின் ஒற்றுமையை காண ஆவல்மீறியே உள்ளோம்..ஆனால் அது தற்போதைய சூழலில் எட்டாக் கனியாகவே இருக்கிறது.அதற்காக நாம் யாரோ வரட்டும் எப்படியோ போகட்டும் என இருந்திட முடியாதே..
சரி என்ன செய்யலாம்.அந்தந்த தொகுதியில் நிற்கும் நமது வேட்பாளர்களை முழு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச்செய்யுங்கள்.தமிழகத்தில் குறிப்பாக மமக மற்றும் SDPI கட்சிகள் முஸ்லீம்களின் தனி கட்சிகளாக உருவெடுத்துள்ள இந்த சூழலில் அவர்களை முழுவதுமாக ஆதரித்து வெற்றி காணச்செய்வோம்.
பின்னர் அவர்களது நடவடிக்கைகளை பொருத்து அவர்களுக்கான ஆதரவு தொடரலையும்,விலக்களையும் முடிவு செய்வோம்.ஒருவேலை இவர்களும் நாளை சராசரி அரசியல்வாதிகளாகிவிட்டால்,நாம் காலங்காலமாக கண்டுவந்த திராவிட கட்சிகளை விடவும் இவர்கள் நம்மை வஞ்சித்துவிட மாட்டார்கள்...அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை முழுவதுமாக ஆதரிப்போம்..
இஸ்லாமியர்களை பொருத்தவரை ஓட்டுக்கு காசு என்பது ஒர்க் அவுட் ஆகாத சமாச்சாரம் என நம்புகிறேன்.அது கிராமப்புறங்களில் மட்டுமே வேலை செய்யும்.ஆதலால்,நாம் நமது எதிர்காலத்தின் பாதுகாப்பையும், உரிமைகளையும், பெற்றுக்கொள்ள நமது சகோதரர்களுக்கு ஆதரவை நல்குவோம்.முஸ்லீம்கள் யாரும் பிற மதத்தவரை வஞ்சித்துவிடுவது கிடையாது.அவர்களால் பிறமதத்தவர் ஒருபோது அச்சம் கொள்ளவும் தேவையில்லை.மாற்றத்தை விரும்பும் மக்கள் முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிக்கலாம்.அவர்கள் ஒருபோது கைவிடப்பட மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை..
ஏனெனில் உடன்படிக்கை செய்துகொண்டவர்களின் ஒப்பந்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவது முஸ்லீம்களின் மீது கடமையான ஒன்று..ஆகவே நம்பலாம்..
காவிகளின் கரங்கள் நாடுமுழுவதும் விரவி,நமது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவரும் இந்தச் சூழலில் நாம் இப்படி இயக்க பேதங்களால் ஒற்றுமை இழந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது.சிங்கமும் காளைகளும் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது.முஸ்லீம்களை பொருத்தவரை,ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு,ஒற்றுமை நீங்கிடின் நம் அனைவருக்கும் தாழ்வு என்பதை மனதில் கொள்வோம்.இயக்க பேதம் மறப்போம்.இனிய உறவு வளர்ப்போம்.
எனதருமை மாற்றுமத சகோதரர்களே,இந்தியாவில் 15% க்கும் குறைவாக இருக்கும் முஸ்லீம்கள் அத்துனை எளிதில் ஒன்றுபட்டுவிடப்போவதில்லை,அவர்களை ஒன்றுபட விஷமிகள் விடப்போவதும் இல்லை.முஸ்லீம்கள் ஒன்றுபட்டு யாரும் நாட்டை பிடித்துவிடப்போவதில்லை.அல்லது ஒன்றுபட்டுவிட்டால்,உங்களை வஞ்சித்துவிடுவதும் இல்லை.
எங்களது இப்படிப்பட்ட கோரிக்கைகள் யாவும் முஸ்லீம்கள் தங்களின் குறைந்த பட்ச பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள தேவையானவை. காவிகளால் நாம் நாடுமுழுவதும் கருவருக்கப்படுவதில் இருந்து எங்களை நாங்களே தற்காத்துக்கொள்ளும் குறைந்த பட்ச நடவடிக்கையின் வெளிப்பாடு.
மக்கள் பணத்தை வாரி இறைக்கும் கட்சிகளையும்,கர்வம் கொண்ட கவர்ச்சி கதாநாயகிகளையும்,காமெடி கதாநாயகர்களையும்,எந்த உத்திரவாதமும் இன்றி நம்பத்தயாராக இருக்கும் நாம்,நாளை அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள சகோதரர்களை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆதரிப்போம்.இன்ஷா அல்லாஹ் ந்ல்லதே நடக்கும்...
அன்புடன்
ரஜின்
SDPI தமிழ் மாநில தலைவரின் பதில்கள்
திங்கள், 11 ஏப்ரல், 2011
மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9
தினம் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதத்தை தவிர்க்கலாம்!
தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 விழுக்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது நல்லது என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது உடலுக்குத் தேவையான பொட்டாஸியத்தை வழங்குகின்றது. அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 விழுக்காடு தடுக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்
காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களிடையே 45 ஃபலஸ்தீன் மக்களை இஸ்ரேல் கொலைச் செய்துள்ளது. கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல் நடத்தும் விமானத்தாக்குதலில் 19 பேர் மரணித்துள்ளனர். பன்னிரெண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2008 டிசம்பர் முதல் 2009 ஜனவரி வரை இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட காஸ்ஸா போருக்கு பிறகு மிகவும் வலுவான தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருவதாக ஸஹர் தெரிவித்தார்.
இஸ்ரேல் விமானத்தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் ஏவுகணைகளை ஏவுவதில் ஆள்சேதம் குறித்து தகவல் இல்லை.
2007 ஆம் ஆண்டு ஜனநாயகரீதியிலான தேர்தல் மூலம் தேர்வுச் செய்யப்பட்ட ஹமாஸ் காஸ்ஸாவை ஆட்சிபுரிந்த காலம் முதல் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் 15 லட்சம் ஃபலஸ்தீன் மக்களின் வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை கடத்திச் செல்வதற்கு தலைமை வகித்த ஹமாஸ் கமாண்டர் தைஸர் அபூவை விமானத்தாக்குதலில் கொலைச் செய்ததாக இஸ்ரேல் கூறியதற்கு, ஹமாஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஹமாஸ் கிலாத் ஷாலிதை கடத்திச் சென்றது. அவரை விடுவிப்பதற்கான இஸ்ரேலின் முயற்சி இதுவரை பலிக்கவில்லை. அதேவேளையில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தால் தாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் இதனை தெரிவித்துள்ளார்.
www.thoothuonline.com
பிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது
பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
மேற்குவங்காளம்:மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.டி.பி.ஐயில் இணைந்தார்
கொல்கத்தா:முர்ஷிதாபாத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவரும் பிரபலமான அரசியல்வாதியுமான நஸ்ருல் இஸ்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பகவன்கோலா சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் நஸ்ருல் இஸ்லாம் அத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் சுயேட்சை வேட்பாளராக களத்தில் உள்ளார்.
2011 Assembly Election – SDPI Candidates list of Tamil Nadu and West Bengal
ஞாயிறு, 10 ஏப்ரல், 2011
கல்கி
ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.
இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
நேர்மறை அரசியலை தேர்வு செய்வோம்! பாரம்பரிய கட்சிகளை புறக்கணிப்போம் - பாப்புலர் ஃப்ரண்ட்
கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமையவும், அடிதட்டு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இதியாவின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது. மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குவது என முடிவுசெய்துள்ளது.
யெமன்:அல்ஜஸீராவின் அலுவகம் மூடல்
ஸன்ஆ:மக்கள் எழுச்சிப்போராட்டம் வலுவடைந்துள்ள யெமன் நாட்டில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்து மூடினர். தலைநகரான ஸன்ஆவிலுள்ள முக்கிய அலுவலகம் தான் மூடப்பட்டுள்ளது.யெமன் நாட்டில் செயல்படும் பெர்மிட்டும் அல்ஜஸிராவுக்கு ரத்துச்செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
ஒரு தாயின் விடைத்தெரியாத வினாக்கள்
கண்ணூர் மைதானப்பிள்ளில் என்ற வீட்டில் இமைகளில் கண்ணீர் வற்றாத ஒரு தாய் வசிக்கிறார்.மகனின் இறந்த உடலை கூட பார்க்கமாட்டேன் எனக் கூறி செய்திகளில் இடம்பிடித்த அந்த தாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தேச துரோகியான எனது மகனின் இறந்த உடலை காண விரும்பவில்லை எனக்கூறிய ‘ஒரு தாயின் நாடுதான் இது’ என்ற வாசகத்துடன் இந்த தாயின் சித்திரம் கேரள மாநிலத்தின் சுவர்களில் இடம் பிடித்திருந்தது.
திங்கள், 4 ஏப்ரல், 2011
நாம் அதிகாரத்தின் பங்காளிகள்
நம்முடைய இந்த வாழ்க்கை பயணத்தில் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்த படாதபாடு படுகின்றோம். அதற்கு உழைப்பும் கூரிய நுண்ணறிவும் முக்கிய காரணிகளாக திகழ்ந்தாலும் நாம் வாழும் சுற்றுப்புறமும் நம்மை ஆட்சிசெய்யும் ஆட்சியாளர்களின் சீரிய சிந்தனையுமே ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நாம் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக அவர்களை பற்றிய முழுவிவரங்களை அறிந்தே நாம் அவர்களை தேர்வு செய்யவேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் நிலைபாடு!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்டின் அரசியல் நிலைபாடு குறித்து மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பப்பட்டுள்ளதாவது.
எஸ்.டி.பி.ஐ:
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,
எஸ்.டி.பி.ஐ:
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,
‘ஹிந்துத்துவம் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை’: ஆர்.எஸ்.எஸ். சூளுரை
இதனைத் தொடர்ந்து,ஹிந்துத்துவம் என்பது எங்கள் அமைப்பின் அடிப்படைவாதம் என்றும்,அதில் எந்த மாற்றுக் கருத்தும் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் சூளுரைத்துள்ளார்.
SDPI வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும்
அடுத்த மாதம் 13 தேதி அன்று சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த முறையிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு கட்சிகளும், சுயேட்சைகயாக போட்டியிடுபவர்கள் தான்.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)