
சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் 3 பகல் 3 இரவு என்ற அடையாளம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். ஆனால் அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார். அந்த மறுப்பும் எந்த அளவுக்கு முரண்பாடானது குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்:
இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :
இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39
For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth
அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், அதன் மூலம் தங்களது 'ஆதிபாவம்' என்னும் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களின் அறியாமையைப் பயன் படுத்தி நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையும் கூட. இதை நம்பாதவன்; மோட்சம் அடைய மாட்டான் என்று சொல்வதுடன், நம்மையும் இவ்வாறு நம்புங்கள், இல்லை என்றால் நீங்கள் பரலோக இரஜ்யத்தை அடைய முடியாது என்று பூச்சாண்டி காட்டுவோரும் உண்டு. அதனால் தான் வருடந்தோரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி என்றும், அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் அதாவது இயேசு மூன்று நாள் கழித்து உயரித்தெழுந்த தினம் என்றும் கொண்டாடுகின்றனர்.
இந்த நம்பிக்கை சரியா? இவர்கள் சொல்வது போன்று தான் பைபிளும் கூறுகின்றதா? இன்றைய அப்பாவிக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உன்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் ஒளியில் சற்று விரிவாக ஆராய்வோம்.
இயேசுவை சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று 3ம் மணி வேலையாக இருந்த போது அவரை சிலுவையில் அறைந்ததாக பைபிளில் சொல்லப்படுகின்றது :
அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. - மாற்கு 15:25
அதன்பிறகு சில மணி நேரம் கழித்து அவர் இறந்து விடுவதாகவும், அதன் பின்னர் அரிமத்தியாக்காரனான யோசேப்பு என்பவன் வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையத் தெடாங்கிய பின் இயேசுவின் உடலைக் கேட்டதாகவும், பின்னர் அவரது உடலைப் பெற்றுக்கொணடு அடக்கம் செய்ததாகவும் பைபிளில் சொல்லப்படுகின்றது:
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான். அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. – லூக்கா 23:50-54
அதாவது இயேசு கல்லலையில் வைக்கப்படும் போது இரவு ஆரம்பமாகிவிட்டது என்பதைத் தான் ஓய்வு நாளும் ஆரம்பமாயிற்று (அதாவது சனிக்கிழமை ஆரம்பமாயிற்று) என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஏனெனில் பைபிளின் படி ஒரு நாள் என்பது மாலை சூரியன் மறையத்தொடங்கியதிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. (பார்க்க ஆதியாகமம் 1:5, லேவியராகமம் 23:32)
WBTC மொழிப்பெயர்ப்பின் மாற்கு 15:42ம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது :
இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு முந்திய நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும் மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய இரஜ்யம் வருவதற்காக காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் துனிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 15:42-43
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனங்களின் மூலம் இயேசு அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை இரவு என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஏனெனில் யோசேப்பு என்பவன் பிலாத்துவினிடத்தில் இயேசுவின் உடலைக் கேட்கும் போதே சூரியன் மறையத்தொடங்கிவிட்டது - இருட்டத் தொங்கிவிட்டது - என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது. அதன் பின் அவன் யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக இரவு வந்துவிடும் - அடுத்தநாள் தொடங்கிவிடும் என்பது தெளிவாக விளங்கும்.
அதன் பின்னர் இயேசு எப்போது உயிர்த்தெழுந்தார் என்பதை பைபிளில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள் - யோவான் 1:20
உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், - லூக்கா 24:3
அதாவது இந்த வசனங்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே - சூரியன் உதயமாவதற்கு முன்பே - இயேசு உயிர்த்தெழுந்ததாக பைபிளின் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசனங்களின்படி பார்த்தால் இயேசு பூமியின் இருதயத்தில் - கல்லறையில் எத்தனை நாட்கள் இருந்திருப்பார்? அவர் முன்னறிவித்ததன்படி இருந்தாரா அல்லது அதற்கு மாற்றமாக இருந்தாரா? அதை ஒரு இலகுவான கணக்கின்படி பார்ப்போம்:
-------------------------------------------------------------------------
-----இயேசு உடல் கல்லறையில் இருந்த நாட்கள்---------பகல்-----இரவு---
-------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------வெள்ளிக்கிழமை---------------------------------------இல்லை---1-இரவு--
--------------------------------------------------------சனிக்கிழமை-------------------------------------------1 பகல்---1 இரவு
------------------------------------------------------------------------------ஞாயிற்றுக்கிழமை-------------------------------------இல்லை---இல்லை
------------------------------------------------------------------------------- ------------------------------------------மொத்தம்------1 பகல்---2 இரவு
மேலே நாம் பார்த்த கணக்கின்படி இயேசு பூமியின் இருதயத்தில் (அதாவது கல்லறையில்) இருந்தது வெறும் 1 பகல் 2 இரவுகள் மட்டுமே என்பது தெளிவாக விளங்கும். ஆனால் மத்தேயு 12:39ம் வசனத்தின் படி இயேசு 3 பகல் 3 இரவு பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்று முன்னறிவித்தாரே? அப்படி இருந்தாரா? பைபிளின் அவரது கடைசிகால நிகழ்வுகள் அப்படித்தான் இருந்தார் என்று சொல்லுகின்றதா? இல்லையே! மாறாக 1 பகல் 2 இரவுகள் மட்டும் தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) இருந்ததாக ஒன்றல்ல நான்கு சுவிஷேஷங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இது இயேசுவின் சிலுவை கொள்கையில் உள்ள அப்பட்டமான முரண்பாடு இல்லையா? அது மட்டுமல்ல, இந்த யோனா சம்பந்தப்பட்ட வசனம் இயேசு உயிருடன் இருப்பதை குறிக்காது. மாறாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணக்கை மட்டும் தான் குறிக்கும் என்று சொன்ன கிறிஸ்தவர்களே, இந்த காலக்கணக்கும் உங்கள் குருட்டு நம்பிக்கைக்கு எதிராகத்தானே இருக்கின்றது? அதைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டாமா?
இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார். அதன் மூலம் கிறிஸ்தவர்களின் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்பதும், அதை நம்பாதவன் மோட்சம் அடைய மாட்டான் என்பதும் இன்றயை கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கை. இதைச் சொல்லித்தான் இன்றைய கிறிஸ்தவ மிஷினரிகள் பல அப்பாவி மக்களை ஏமாற்றி மதம் மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த கொள்கை இல்லை என்றால் இன்றைய கிறிஸ்தவமே கிடையாது என்கிற அளவுக்கு மிக முக்கியமான கொள்கையில் இப்படிப்பட்ட அப்பட்டமான முரண்பாடு வரலாமா? இந்த சம்பவம் உன்மையிலேயே நடந்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்குமா?
இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் ஈஸா மஸீஹின் நிலையை மிகத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது!
"இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை." (4:157)
இயேசு மீது உண்மையான விசுவாசம் கொண்டு அவர் காட்டித்தந்த வழியான "இஸ்லாம்" என்னும் மார்க்கத்தை பின்பற்றுவவோம்! வெற்றிபெறுவோம்!
நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!
நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!
நன்றி :harbour-popularfront
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக