
இப்பேரணிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரி. நஜ்மா அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபாத்திமா கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளல் ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றி பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவாக கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
* மண்டல கமிஷன் அறிக்கையின்படி பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உடனே நிறைவேற்ற வேண்டும்.
* பாலியல் குற்றத்திற்கெதிரான தண்டனை சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
* காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி பெண்கள் பாதிக்கபடுவதை தடுக்க வேண்டும்.
* பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும்.
* திரைப்படம் மற்றும் சின்னத்திரைகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஆபாசத்தை தடை செய்ய வேண்டும்.
* சினிமா தணிக்கைகுழு ஆபாசமான திரைப்படங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
* இருபாலார் கல்வி முறையை ஒழிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மூலமாக வலியுறுத்தப்படுகின்றது.
நன்றி :Harbour-popularfront.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக