ஞாயிறு, 3 ஜூலை, 2011

அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விரைவில் மாணவர்ச் சேர்க்கை நடைபெற உள்ளது. ஓரிரு நாளில், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அங்கீகாரத்துடன் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல், மாவட்ட வாரியாக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு தகுதியான, அங்கீகாரத்துடன் இயங்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல், மாவட்ட வாரியாக, ஆசிரியர் கல்வித்துறை இணையதளத்தில் (www.dtert.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் அப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த பட்டியலில் பார்த்து, சேர உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 38 பள்ளிகள், கடலூர் மாவட்டத்தில், 33 ,திருச்சி மாவட்டத்தில், 36 , திருவண்ணாமலை மாவட்டத்தில், 44 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில், 56 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. மிகக் குறைவாக, நீலகிரி மாவட்டத்தில் மூன்று, தேனி மாவட்டத்தில் எட்டு, கரூர், அரியலூர் மாவட்டங்களில் தலா ஏழு பள்ளிகள் உள்ளன.
Source: Kalvimalar
நன்றி : V.A.செய்யது அப்துல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக