தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூன், 2011

108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?

தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர், டிரைவர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் ஜூன் 9ம் தேதி நடக்கிறது.
 
இதுகுறித்து, ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சனி, 28 மே, 2011

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்

தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அவரை நியமித்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சையத் முனீர் ஹோடா பதவி விலகியதையடுத்து அய்யருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் மதுரை, கரூர் மாவட்டக் கலெக்டராகவும் கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்துத் தந்த பெருமையும் இவரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 மே, 2011

இன்று முதல் ஜூன் 3 வரை பி.எட். விண்ணப்ப வினியோகம்

மதுரை: இந்த கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (18-ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

2011-12ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உதவி பெறாத தனியார், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாதார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம் மற்றும் தெலுங்கு வாயிலாக ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில், ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்த இயக்ககத்தால் வரவேற்கப்படுகின்றன.

சனி, 23 ஏப்ரல், 2011

மார்ச்-8 உலக மகளிர் தினம் - N.W.F நடத்திய பேரணி

மார்ச்-8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ( N.W.F ) சார்பாக 08.03.2011 மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரி. நஜ்மா அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபாத்திமா கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்டின் மாநில‌ செயலாளல் ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றி பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

சனி, 16 ஏப்ரல், 2011

துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ மற்றும் தி.மு.கவினரிடையே மோதல்!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்ற 13ஆம் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவது நடைபெற்றது. ஒரு சில இடங்களில் தவிற மற்ற அனைத்து இடங்களிலும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நமது துறைமுகம் தொகுதியில் கொண்டித்தோப்பு, சிவனங்கன் பூங்கா அருகில் ராமகிருஷ்ணா பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஆளூம் தி.மு.கவினர் கள்ள ஓட்டுப்போடுவதாக தகவல் கிடைத்ததும் எஸ்.டி.பி.ஐன் உறுப்பினர்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக கொண்டித்தோப்பிற்கு விரைந்து சென்றனர்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

SDPI தமிழ் மாநில தலைவரின் பதில்கள்


SDPI தமிழ் மாநில தலைவர், இமாம் KKSM .தெஹ்லான் பாகவி அவர்கள் வாசகர் பெருமக்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் அனுபயுள்ளர்கள், அந்த பதிலை இங்கே வெளியிடுகின்றோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் நிலைபாடு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்டின் அரசியல் நிலைபாடு குறித்து மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பப்பட்டுள்ளதாவது.

எஸ்.டி.பி.ஐ:

முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,

SDPI வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும்

அடுத்த மாதம் 13 தேதி அன்று சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த முறையிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு கட்சிகளும், சுயேட்சைகயாக போட்டியிடுபவர்கள் தான்.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதன், 30 மார்ச், 2011

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு

 தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழகங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!


  SONY DSC
சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சனி, 19 மார்ச், 2011

ஸ்ரீரங்கம் அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அங்குள்ள அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிராமணர்கள் நிறைந்துள்ள ஸ்ரீரங்கத்தில் இந்த முறை போட்டியிடவுள்ளார் ஜெயலலிதா. இதற்காக அவர் ஸ்ரீரங்கத்தில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஞாயிறு, 13 மார்ச், 2011

புறப்பட்டுவிட்டார்கள் SDPI சட்டமன்ற தேர்தலில் வெற்றியை குவிக்க

சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டி - முதல் கட்ட தொகுதிகள் அறிவிப்பு


சென்னை,மார்ச்.12:சென்னை துறைமுகம் உட்பட 10 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை எஸ்.டி.பி.ஐ. அறிவித்துள்ளது.

சனி, 12 மார்ச், 2011

சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்


சென்னை,மார்ச்.11:தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.

வெள்ளி, 11 மார்ச், 2011

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு கிடையாது

சென்னை, மார்ச். 10-
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான அறிவிக்கையை தெரிவிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று மாநில அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதாகவும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கைக்கு ஒப்புதல் இல்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் தற்பேதைய நிலையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி : கூடல்

திங்கள், 7 மார்ச், 2011

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு…
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

புறப்பட்டுவிட்டது SDPI அரசியலை நமதாக்க ,தேசத்தைப் பொதுவாக்க

 
அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (YMCA வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை காலை 9 மணியளவில் மாநிலத் தலைவர் KKSM. தெஹ்லான் கொடியேற்றி துவக்கி வைத்தார். அப்போது தேசிய மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் SDPI-ன் செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு எழுச்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.
பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு எழுச்சிப் பேரணி துவங்கியது. பேரணியை SDPI-ன் அகில இந்தியத் தலைவர் E.அபுபக்கர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உங்கள் தொகுதி - உங்கள் எம்.எல்.ஏ.!

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. இனி நாடே திருவிழாக் கோலம் ஆகும். இதுவரை ஏறிட்டுக்கூட பார்த்திராத உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இப்போது உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அளவளாவுவார்கள். கை கூப்புவார்கள். ஏன், காலில் கூட விழுவார்கள். சில தொகுதிகள் இதில் விதிவிலக்கு பெறும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருப்பார்கள். உண்மையிலேயே மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.

தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஏன் தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்காத எம்.எல்.ஏ.க்களை இந்த உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இனியும் உருவாக்காதீர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த, உருப்படியாக தங்கள் தொகுதிகளுக்கு ஏதாவது செய்த எம்.எல்.ஏ.க்களை நாம் இனம் காண வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

அதற்காக பாலைவனத்தூது ஆரம்பிக்கவிருக்கும் புதிய தொடர்தான் உங்கள் தொகுதி! - உங்கள் எம்.எல்.ஏ.!

ஆனால் வாசகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் தொடரை தொடர முடியாது.

வாசகர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியின் நிலவரம், உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடு, அவர்களால் உங்கள் தொகுதிக்கு ஏற்பட்ட வளர்ச்சி அல்லது பின்னடைவு... போன்றவற்றை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஒவ்வொரு தொகுதியையும் வாசகர்களாகிய உங்களின் மூலம் அலசி ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மட்டும் வெளியிடவுள்ளோம். இந்தத் தகவல்களை உங்கள் தொகுதியின் இன்னபிற மக்களும் அறிந்து விழிப்புணர்வு பெறுவார்கள். அத்தோடு சரியான நபருக்கு, சரியான கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள். முடிந்தால் புகைப்படங்களுடன் கூடிய விமர்சனங்களை எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

மறவாமல் உங்கள் தொகுதியின் பெயரையும்,உங்கள் எம்.எல்.ஏ.வின் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com

என்ன வாசகர்களே! தயாரா...?

நாட்டைக் காப்பாற்ற புறப்படுங்கள்! ஓட்டை வென்றெடுக்க ஒன்றுபடுங்கள்!!
 
 

வியாழன், 3 பிப்ரவரி, 2011

யாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் ! (எச்சரிக்கை !)



அதிரைப்பட்டினத்து நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப் படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு "தொழுவதற்கு இடம்" கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி


கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித் தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 20 பேர் வரை இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.