திங்கள், 4 ஏப்ரல், 2011

SDPI வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும்

அடுத்த மாதம் 13 தேதி அன்று சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த முறையிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு கட்சிகளும், சுயேட்சைகயாக போட்டியிடுபவர்கள் தான்.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் இருப்பதால் கடைசி 10 நாட்களில் தங்களுடைய சின்னங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு மட்டுமல்லாமல் பிரச்சாரத்திலும் பல கெடுபிடிகளை தேர்தல் ஆணையம் வித்தித்துள்ளதால் போட்டியாளர்கள் நொந்து போய் உள்ளனர். ஒவ்வொரு போட்டியாளர்களின் செலவுகளை கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றியவாரு தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் வருமாறு,

1. திருப்பூர் தெற்கு - அமானுல்லாஹ் - இரட்டை மெழுகுவர்த்தி

2. பாளையங்கோட்டை - ஷாஹுல் ஹமீது உஸ்மானீ ஆலிம் - டி.வி.

3. கடையநல்லூர் - நெல்லை முபாரக் - டி.வி.

4. இராமனாதபுரம் (சுயேட்சை) - ஃபெரோஸ்கான் - டி.வி.

5. நாகை பூம்புகார் - முஹம்மத் தாரிக் - டி.வி.

6. கோவை தொண்டாமுத்தூர் - உமர் கத்தாப் - கேஸ் சிலிண்டர்

7. சென்னை துறைமுகம் - முஹம்மத் ஹுஸைன் - இரட்டை மெழுகுவர்த்தி

8. புதுவை நிரவி - பத்ருதீன் - டி.வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக