திங்கள், 4 ஏப்ரல், 2011

நாம் அதிகாரத்தின் பங்காளிகள்

நம்முடைய இந்த வாழ்க்கை பயணத்தில் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்த படாதபாடு படுகின்றோம். அதற்கு உழைப்பும் கூரிய நுண்ணறிவும் முக்கிய காரணிகளாக திகழ்ந்தாலும் நாம் வாழும் சுற்றுப்புறமும் நம்மை ஆட்சிசெய்யும் ஆட்சியாளர்களின் சீரிய சிந்தனையுமே ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நாம் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக அவர்களை பற்றிய முழுவிவரங்களை அறிந்தே நாம் அவர்களை தேர்வு செய்யவேண்டும்.
இன்றைய சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால் நம்முடைய பிரதிநிதியாக நம்மை நிர்வகிக்க நாம் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளின் நிலை என்ன? மற்றும் நம்முடைய நிலை என்ன? நாம் எத்தகைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர் எத்தகையவராக இருக்கவேண்டும்? நாம் எத்தகயவர்களை தேர்வுசெய்யக்கூடாது? எத்தகையவர்களுடன் இணைய வேண்டும் என்று சிறிது அலசுவோம்.
     தமிழகம் முழுவதும் வாக்குறுதிகள் பறக்கும் காலகட்டம் இது. இதில் நகைச்சுவையான மற்றும் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஒவ்வொரு கட்சியுனுடைய தேர்தல் அறிக்கைகள். தங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக மக்களை லஞ்சம் கொடுத்து மற்றும் ஆசை வார்த்தைகளை தேர்தல் அறிக்கைகளாக கொடுத்து மக்களை விலைக்கு வாங்கத் துடிக்கும் அரசியல் கட்சிகள் தான் இன்று நம் முன்னிலையில். மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல எந்த செயல்திட்டங்களும் இல்லாத வெற்று அரசியல் கட்சிகள்தான் முதன்மை கட்சிகளாக பவனிவருகின்றன.அவர்களின் தேர்தல் அறிக்கைகள் இதோ
Hilarious political cartoon images

இது பொது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவா? இல்லை கண்டிப்பாக இல்லை. பொது மக்களினுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த என்றால்,அவர்களுடைய அவசிய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யும் வண்ணம் அவர்களின் வேலைவாய்ப்பிற்கு அல்லவா வழிவகுக்க வேண்டும்.அதல்லாமல் இவர்கள் கொடுக்கும் இலவசப்போருட்களினால் அவர்களின் வாழ்க்கைத்தரம் ஒருபோதும் உயராது. இத்தகைய ஏமாற்று அரசியலின் மூலம் நம்முடைய நாட்டை வல்லரசாக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. நம்முடைய நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நெஞ்சமும் இந்த ஊழல் அரசியலை ஒழித்துவிட்டு ஒரு மாற்று அரசியலை உருவாக்கவேண்டும் என்று விரும்புகின்றது.

மக்களின் நிலையோ எவ்வாறு இருக்கின்றது என்றால் யார் வந்தாலும் ஏழைகளின் ஏழ்மையை போக்க, வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்போவதில்லை,ஊழல் ஒழியப்போவதில்லை, அவர்கள் செய்யப்போவதோ ஊழல் மற்றும் குடும்ப அரசியல். இதனால் பொதுமக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே இந்த அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் கொடுக்கும் பணம் மற்றும் இலவசபொருட்கள் மட்டும்தான் பொதுமக்களான நமக்கு பலன். என்ற நிலைக்கு பொதுமக்கள் நிர்பந்தமாக தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையை பொதுமக்களான நம்மால் மாற்றமுடியும்.
எவ்வாறு?
நாம் தேர்ந்தெடுக்கும் நம்முடைய பிரதிநிதி நம்முடைய நாட்டை வளமுள்ள நாடாக, நம்முடைய மக்களை வலிமையுள்ள மக்களாக மாற்றும் வல்லமையுள்ளவராகவும், நாட்டில் நடக்கும் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அராஜகங்களை ஒடுக்கக்கூடியவராக, அரசு அதிகாரிகளின் அசட்டுத்தனத்தை அகற்றக்கூடியவராக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய பொதுவாழ்வில் உண்மையாளராக இருக்கவேண்டும் மேலும் பொதுமக்களின் குறையை தீர்த்துவைக்கும் தூய குணம் உள்ளவராக இருக்கவேண்டும். அத்தகையவரை நாம் நம்முடைய பிரதிநிதியாக தேர்ந்தேடுக்கவேண்டும்.
அதெல்லாமல் அரசியலில்  நாம்  தேர்தெடுக்கும் பிரதிநிதியை பணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் கொடுக்கும் பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களை தேர்ந்தெடுப்போம் என்றால் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்கள் செலவிட்டதை எப்படி திரும்பப்பெருவார்கள். பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஊழல் செய்வார்கள்.
பொதுமக்களான நாம் நம்முடைய நிலையை மாற்றிக்கொள்ளாத வரை அத்தகைய ஊழல் அரசியல்வாதிகளை மாற்றமுடியாது. நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களாக உங்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுங்கள்.
இந்த அரசியல் கட்சிகளில் ஊழல்களிலும் மதவெறியை பரப்புவதிலும் தனித்துவம் பெற்று விளங்குவது R.S.S என்ற தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. என்ற கட்சி.
நம்முடைய இந்திய நாடு ஒரு மதசார்பற்ற நாடு என்பதில் பெருமைகொள்கின்றோம் நாம். ஆனால் அத்தகைய சிறப்புமிக்க நன்னாட்டில் மதத்தின் பெயரால் மற்றும் பேசும் மொழியின் பெயரால் கலவரங்களை ஏற்ப்படுத்தி அதன்மூலம் ஆட்சியை பிடிக்கும் கோர முகம் கொண்ட கொடுமைக்காரர்களான இவர்களை (பா.ஜ.க.)  எந்த விதத்திலும் அதிகாரத்தில் இடம்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
மக்களின் நலனையே முக்கிய குறிக்கோளாக செயல்படும் அரசியல் கட்சிகளும் நம்மிடம் உள்ளன. அந்த கட்சியின் உறுதிமொழி என்னவென்றால் பசியிலிருந்து விடுதலை மற்றும் பயத்திலிருந்து விடுதலை. ஒரு நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பசியிலிருந்து விடுதலை அடைந்தாலே அந்த நாடு வல்லரசாக உருவெடுக்க தொடங்குகின்றது.
மேலும் அந்நாட்டின் மக்கள் அதிகாரவர்க்கத்தின் பயத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் அம்மக்கள் முழுமையான சுதந்திரம் அடைகின்றார்கள். இத்தகைய உறுதிமொழியை கொண்டு செயல்படும் ஒரு மாபெரும் தேசிய அரசியல் கட்சிதான் S.D.P.I. (Social Democratic Party of India). இந்த அரசியல் பேரியக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்றிணைந்து ஒரு மாற்று அரசியலை உருவாக்குவோம்.அதன் மூலம் நாம் அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் அல்ல,நாமும் அதிகாரத்தில் பங்காளிகள் தான் என்பதை நிரூபிப்போம்.

ஜெய் ஹிந்த்

என்றென்றும் அன்புடன்
அபூஸஃபிய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக