ஞாயிறு, 30 ஜனவரி, 2011

சவூதி அரேபியா:ஜித்தாவில் பெருவெள்ளம் - 4 பேர் மரணம் - கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்


ஜித்தா,ஜன.29:கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெருமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர். முக்கிய சாலைகளெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதிபோல் காட்சியளித்தன. இதனால் மக்கள் வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கடைகளில் ஒதுங்கினர்.


வியாழக்கிழமை கால நிலை மாறினாலும் மக்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு மாற இன்னும் சில தினங்கள் ஆகலாம். மூன்று மணிநேரத்தில் 111 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது.

மழைத் துவங்கி சில மணிநேரங்களுக்குள்ளாகவே ஃபலஸ்தீன் தெரு, ஹாயில், மதீனா சாலை, வாலி அல் அஹத் தெரு, ஷரஃபியா ஆகிய பகுதிகள் உட்பட நகரத்தின் முக்கிய பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் இரவில் பள்ளிக்கூடங்களிலும், அதிகாரிகள் ஏற்பாடுச்செய்த தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலையில்தான் பல மாணவர்களும் வீடு திரும்பினர்.

புதன் கிழமையிலிருந்து நகரத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் தொடர்பு பாதிக்கப்பட்டிருந்தது. துயர்துடைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், சாதாரண வாழ்க்கை வெகுவிரைவில் புனரமைக்கவும் நியூயார்க்கில் அறுவை சிகிட்சையை முடித்துவிட்டு மொரோக்கோ நாட்டு காஸாபிளாங்காவில் ஓய்வெடுக்கும் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி :மாத்யமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக