புதன், 12 ஜனவரி, 2011

இயேசு விபச்சார சந்ததியில் பிறந்தவர் - பைபிள்

இயேசுவை பைபிளில் மத்தேயுவும் லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இயேசுவின் சந்ததிப்பட்டியல் என்று பட்டியல் ஒன்றை பைபிளில் சொல்லியிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர் 'அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பைபிளின் பின்வரும் போதனையை நினைவில் கொள்க
விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையாவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது. (உபாகமம் 23:22,3)
எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார் எனவும் அதே பைபிள் கூறுகின்றது.
யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். (மத் 1:3)
இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் 'தாமார்” என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்
'தாமார்” என்பவள் யார்?
"யூதா" என்பவன் யார்?
"பேரேஸ்” என்பவன் யார்?
இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க)
விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் -அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில்- இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.
மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும் மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின்படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)
தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். (மத்; 1:6)
இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; 'மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும் ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியர்ள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்;ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடல்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே-அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம்- அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாலால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.
அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும் தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம்மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்.
அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர்உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்... (எசக்கியேல் 23-ஆம் அதிகாரம்)
தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்; பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார்தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான். (இரண்டாம் சாமுவேல் 13:1-15 )
சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். (மத் 1:5)
என்றும் வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது
இந்த ராகாப் யார்?
அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா? கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா?

நன்றி: இயேசு அழைக்கிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக