புதன், 16 மார்ச், 2011

அமெரிக்க அரசின் கண்காணிப்பில் முஸ்லிம்கள்


  600px-US-FBI-Seal_svg_01
வாஷிங்டன்:தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை எனக்கூறி அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு நிறுவனமான  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்(எஃப்.பி.ஐ) அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை கண்காணித்து வருகிறது.
மஸ்ஜிதுகளுக்கு வரும் முஸ்லிம்களை முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளது எஃப்.பி.ஐ என அமெரிக்க இஸ்லாமிக் ரிலேசன்(CAIR) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் தகவல்களை உடனுக்குடன் அளிக்குமாறு எஃப்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் புதிய அதிகாரிகளுக்கு இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் குறித்து தவறான புரிந்துணர்வு  நிலவும் சூழலில் அவர்கள் அளிக்கும் அறிக்கைகள் குறித்து CAIR கவலை தெரிவித்துள்ளது.
வெர்ஜீனியாவில் மஸ்ஜித் இமாமைக்குறித்து தகவல்களை சேகரிக்கும் ஏஜன்சிகள் அவருடைய தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதாக CAIR தலைவர் இப்ராஹீம் ஹூப்பர் தெரிவித்துள்ளார். சமூகத்தில் கலகத்தை உருவாக்குவதற்கே அரசின் நடவடிக்கைகள் உதவும் என இப்ராஹீம் ஹூப்பர் மேலும் தெரிவித்தார்.

நன்றி : www.thoodhuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக