கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.
கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.










திரிபோலி:லிபியாவின் மீது மேற்கத்திய படையினர் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் சமரசப்பேச்சுவார்த்தைக்கு தயார் என லிபிய அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.பல வாரங்களாக தொடரும் கத்தாஃபி எதிர்ப்பு போராட்டங்களுக்கும்,மேற்கத்திய படையினரின் தாக்குதல்களுக்கும் இடையே நேற்று காலை அரசு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்த முஅம்மர் கத்தாஃபி மேற்கத்திய படையினரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:நான் அதிகாரத்திலிருந்து விலகி நாட்டை விட்டு செல்ல விரும்பவில்லை.லிபியா போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளது.ஆனால்,இது ஒரு பக்கத்திலிருந்து மட்டும் உருவாகக்கூடாது.
புதுடெல்லி:விமானிகளின் போராட்டம் 5-வது நாளை எட்டிய நிலையில் ஏர் இந்தியா 150 விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.35 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.போராட்டம் இன்றும் தொடர்ந்தால் மேலும் பல விமான சேவைகள் ரத்துச்செய்யப்படும் என கருதப்படுகிறது.மும்பையில் 60 விமானங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
பாக்தாத் : ஈராக்கின் பாராளமன்ற உறுப்பினர்கள் சதாம் ஹுசைனின் படையால் 1990 மற்றும் 1991 ற்கும் இடையில் நடந்த வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடாக அமெரிக்க டாலர் 400 மில்லியன் வழங்க அனுமதி அளித்துள்ளது.இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டியுள்ளது.
ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.