ஞாயிறு, 1 மே, 2011

கடவுள்!..ஹிந்துக்களின் புரிதல்....



கடவுள்!....சரி,அதென்ன அடுத்து "ஹிந்துக்களின் புரிதல்"?...தலைப்பை பார்க்கும் போதே...ஆஹா ஆரம்பிச்சுட்டான்னுங்கடா...ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் இனி திட்டி தீக்க போரானுகன்னுதா பொதுவா எல்லாத்துக்கும் தோனும்...ஏன்னா?ஹிந்துமதத்தப் பத்தி முஸ்லீமும், இஸ்லாத்தை பத்தி ஹிந்துவும் எழுதுனா,அது எதிர்மறை கருத்துப் பதிவாகத்தான் இருக்கும் என்பது பொதுவான புரிதல்,அது ஒருவகையில் உண்மையும் கூட...எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவை விரச விமர்சனங்களாக இல்லாமல், நாகரீகமாக, இருப்பது அவசியம்.
இங்கு கடவுள் குறித்த ஹிந்துக்களில் புரிதல்! என குறிப்பாக ஹிந்துக்களை மட்டும் வம்புக்கு இழுப்பது ஏன்?அப்படியானால், இஸ்லாமிய,கிருஸ்தவ புரிதல் எல்லாம் என்ன ஆச்சுன்னும் கேக்கலாம்..

பொதுவாக கடவுள் குறித்த புரிதலை எளிமையாக இரண்டாகப் பிரிக்கலாம். அது ஒரு கடவுள் கொள்கை/பல கடவுள் கொள்கை.ஆகா!! இதுல என்ன பிரமாதம்.... எல்லா மதமும்,இஸ்லாம்,ஹிந்து,கிருஸ்தவம் உள்பட ஓரிறைக் கொள்கையை தான சொல்லுது அப்டீன்னா..அப்போ பலகடவுள் கொள்கைங்கிறதென்ன? அதை யார் பின்பற்றுகிறார்கள் என்றால், முஸ்லீம்கள் தவிர ஹிந்து,கிருஸ்தவ மக்கள்தாம்..அல்லவா? ஆக ஒரு கடவுள் கொளகைத் தத்துவத்தின் படி இஸ்லாம் தனித்துவிடப்படுவதால்,பல கடவுள் கொள்கையை பிரதானமாகக் கொண்ட ஹிந்து மதம்,இக்கொள்கை குறித்து எப்படிப்பட்ட புரிதலைக் கொண்டுள்ளது என்பதை அலசவே இப்பதிவு. ஹிந்துக்களின் புரிதலை அலசும் இப்பதிவு கிருஸ்தவர்களின் பலதெய்வ கொள்கைக்கும் பதிலளிக்கும் என நம்புகிறேன்.

என்னப்பா இது ஒருகடவுள் கொள்கைன்னாலும்,பலகடவுள் கொள்கைன்னாலும் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள் வர்ராங்களே....அப்ப,ஒரு கடவுள் கொள்கையும்,பல கடவுள் கொள்கையும் ஒன்றா?........ இரண்டும் இருதுருவக் கொள்கைகள் ஆச்சே...அதெப்படி ஒன்றாக முடியும்???....

இந்த சிக்கலில்தான் பல கேள்விகள் எழுகிறது.அதற்கு பதிலும் தரப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ஹிந்து தளத்தில் நடந்த பின்னூட்ட உரையாடலில் பிரதாப் என்ற சகோதரர் இதற்கான் பதிலை தர்க்க ரீதியாக கொடுத்திருந்தார்.இதை ஹிந்து மகான் ஒருவர் கூறியதாக முன்னமே நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.பல கடவுளா? ஒரு கடவுளா? என்ற கேள்விக்கு,ஹிந்துக்களிடம் இருந்து வரும் பதில்கள் அனைத்துமே இந்த ஃபார்முலாவுடன் தான் முன்வைக்கப்படுகிறது.அது என்னான்னா....அத அவரே சொல்ரார் பாருங்க.....

இந்துக்கள் ஒரே கடவுளை தான் வழிபடுகிறார்கள். அந்த கடவுள் எல்லா உருவங்களிலும் உள்ளார். உருவம் இல்லாதவரும் அவரே.உருவங்களுக்கு பல பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
சுவாமிநாதன் என்பவர் ஒரு மனிதர். அவர் குழந்தை அவரை அப்பா என்று அழைக்கிறது. அவர் தாய் அவரை மகனே என்று அழைக்கிறார். அவர் மனைவி அவரை அன்புக்கணவரே என்று அழைக்கிறார்.
அவர் நீதி மன்றத்திற்கு சென்று, தனது ஆசனத்தில் அமர்ந்தவுடன் , அவர் முன்பாக ஆஜராகும் அனைவரும் அவரை, கனம் நீதி அரசர் அவர்களே என்று அழைக்கிறார்கள். 
ஆக ஒரு சாதாரண மனிதருக்கே ஒரு பெயர் போதவில்லை. எனவே இறைவனுக்கு உள்ள பெயர்களோ எண்ணிறைந்தவை. எல்லா பெயர்களும் இறைவனின் பெயர்களே.
இறைவனுக்கு ஒரு பெயர் தான் உண்டு என்று சொல்வது ஒரு மோசடி. இறைவனுக்கு எத்தனையோ பெயர்களும், எத்தனையோ உருவங்களும் உண்டு. உருவமில்லாதவரும் அவரே. - பிரதாப்
பிரதாப் அவர்களின் கருத்து - தமிழ்ஹிந்துவில் இருந்து

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் தான் பல கடவுள் டூ ஒரு கடவுள் கொள்கைக்கான பதில்..இதை மேம்போக்காக பார்க்கும் போது,அட சரிதானேனு தோனும்.ஆனால் இங்குதான் நாம் முரண்பாடுகளை காண்கிறோம்...ஒன்றை எளிமைப்படுத்தி விளக்க உதாரணப்பொருள்களை துணைகொள்வது சகஜமான ஒன்று.ஆனால் கொடுக்கக்கூடிய உதாரணம் ஆனது அதற்கு சாலப்பொருத்தமானதாக இருப்பது அவசியம்..ஏனெனில் விளங்குபவர் அந்த உதாரணத்தை பிராதனமாகக் கொண்டுதான் அதன் சாயலில் கருப்பொருளை விளங்குவார்.அப்படி இருக்க உதாரணம் பிழையாக இருப்பின் கருவின் மீதான புரிதலும் பிழைபடும் என்பதில் ஐயம் இல்லை....
சரி....விஷயத்துக்கு வருவோம்...கடவுளுக்கு பல பெயர்களும் உருவங்களும் இருக்கும்,அது மனித வசதிக்காக கொடுக்கப்பட்டவை என சொல்கிறார்.ஒரு கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது...சரி...அந்தக் கடவுளை நான் எந்தப்பெயரில் அழைத்தாலும் அது அவர்தான்....அதை யார்வேண்டுமானாலும் எந்தப்பெயர் வேண்டுமானலும் கூறி அழைக்கலாம்....அழைக்கனும்...அதுதான் சரி...

உதாரணமாக இஸ்லாத்திலும் அல்லாஹ்வின் பெயர்களாக, அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)/அர்ரஹீம்(நிகரற்ற அன்புடையவன்)/அல்ஹாலிக் (படைப்பவன்)/அல்கரீம்(சங்கைமிக்கவன்)/அல்குத்தூஸ் (தூய்மையாளன்)/அல்அஜீஸ்(மிகைத்தவன்)/என 99 பெயர்கள் உள்ளன.. இத்தகைய பெயர்களைக் கூறி,யார் வேண்டுமானாலும் இறைவனை அழைக்கமுடியும்....
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள சுவாமிநாதன்,ஒருவருக்கு மகனாக, ஒருவருக்கு தகப்பனாக,ஒருவருக்கு சகோதரனாக,ஒருவருக்கு கணவனாக இருக்கிறார்....ஆனால் அவர் யார் யாருக்கு என்னவாக இருக்கிறாறொ,அவர் அவரை அந்தப்பேரில் மட்டும்தான் அழைக்கமுடியும்...
இப்போ,அவருக்குள்ள பெயர்கள் என்ன? மகனே,கணவனே, தகப்பனே, சகோதரனே..என்பன..இதில் தாயானவள்,சுவாமிநாதனை என் மகனே என மட்டுதானே அழைக்க முடியும்,அவரை என் சகோதரனே என்றோ,என் கணவனே என்றோ அழைத்திட முடியுமா???..
மனிதன் ஒருவனாக இருந்தாலும்,மகன் வேறு,கணவன் வேறு,சகோதரன் வேறு.இது எல்லாமே சுவாமிநாதன்தானேன்னு,அம்மா அவனை வேறு பெயர்களில் அழைக்க் முடியாது.அதுபோல சுவாமிநாதனும்,தாயிடம் மகனாக மட்டும்,மனைவியிடம் கணவனாக மட்டும்,பிள்ளைக்கு தகப்பனாக மட்டும் தங்கைக்கு அண்ணனாக மட்டும் இருக்கமுடியும்...அதில் மாற்றம் வந்தால், அதை விட கொடுமை ஏதும் இருக்க முடியாது..இதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்....

ஆனால் கடவுள் அப்படி இல்லையே..அவன் எல்லாருக்கும், எல்லாக் காலங்களிலும், எல்லாமுமாய் இருக்கக்கூடியவன் ஆயிற்றே..அவன் ஒருவனுக்கு ஒருமாதிரியும்,மற்றவனுக்கு வேறுமாதிரியும் இருப்பதில்லையே..
அவர் சொன்ன அதே உதாரணத்தை ஹிந்து கடவுள்களுக்கு பொருத்திப் பார்த்தோமானாலும்,அவையும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கிறது...சிவன்,பிள்ளையார்,முருகன்,ராமன்,ஹனுமன்,காளி,மாரியம்மன், என எண்ணில் அடங்காத ஆண்பெண் கடவுளர்கள் ஹிந்துமதத்தில் உண்டு... முதலில்,இத்துனை பெயர்களில் வழங்கப்படும் அந்த ஒற்றைக்கடவுள் யார்??? இப்போ சகோ பிரதாப்பின் கூற்றுப்படி எல்லாம் ஒரே கடவுள்.அவருக்கு,பல பெயர்கள் என்றால்.முருகனை,விநாயகா!... அப்டீன்னோ, சிவனை, காளி’ன்னோ, ராமனை...மாரி’ன்னோ வணங்க முடியுமா???,,,அப்படி முடிந்தால் தானே...அவர் கூற்று மெய்யாகும்...அப்படி முடிந்தால்தானே....அனைத்து கடவுளும் ஒன்று என்ற நிலை வரும்...
ஆனால் அது சாத்தியமா?...இல்லையே...எல்லாமே வேரவேர கடவுள்.. ஆனா எல்லாக்கடவுளும் ஒன்னு,அப்டீன்னு சொல்பவரே... இப்படி மாறி மாறி பெயர் சொல்லி கடவுளை ஒருவன் அழைப்பதை பார்த்தால்! என்ன சொல்வார்...அட பைத்தியக்காரா!!!...எந்த கோவில்ல வந்து எந்த சாமி பெயர சொல்ரடா... நல்லாப்பாரு....இது இன்ன கடவுள்ன்னு சொல்வாரல்லவா???.....

”இறைவனுக்கு இது தான் பெயர், இது தான் உருவம், அல்லது அவருக்கு உருவம் கிடையாது என்று எல்லைகள் வகுப்பது காட்டுமிராண்டி தனம்.” - பிரதாப்

சரிதான்...அந்த செயலை யார் செய்கிறார்கள் என்று சிந்திக்காமலேயே..கருத்து தெரிவிக்கிறார் பிரதாப்...கொஞ்சம் அவர் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்...இன்ன கடவுளுக்கு,இன்ன உருவம் என்றும்,இன்ன பெயர் என்றும், பிரித்து வகுத்து,கடவுளின் எல்லைகளை சுருக்கிவிட்டு...அவரை அதுவல்லாத வேறு பெயர்களோ வேறு தன்மைகளோ பொருந்தாத பலகீனனாக்கி தான் சொன்ன அதே *****தனத்தை செய்து,பின் அதுவல்ல இதுவென்று விளக்கம் தருவது ”தான்” தானென்று ...

உங்களை போன்றவர்கள் தெளிவு பெற வேண்டுமானால், காலஞ்சென்ற நீதியரசர் ஜனாப் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் எழுதிய “அல்லாவின் அழகிய ஆயிரம் திருநாமங்கள்” போன்ற நூல்களை படித்து தெளிவு பெறுதல் நல்லது.” - பிரதாப்
உண்மைதான்...அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனையே குறிக்கிறது..எப்பெயரில் யார் அவனை அழைத்தாலும்,அது அவன் ஒருவனையே சாரும்...எப்பெயரில் அவனை நினைத்தாலும்,அவன் ஒருவனே உள்ளத்தில்....ஆனால் பிரதாப்! உங்கள் கூற்றுப்படி?????..............

முன்னோர்கள் வழங்கிய பாதையை சிந்தித்து அறிவோம்..(பின்)தொடர்வோம்...

(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்.நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை. - அல்குர்ஆன் - 43: 23


சிந்திப்போம்.....சகோதரர்களே...

அன்புடன்
ரஜின்

3 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்களுடன் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ்.யார் எது சொன்னாலும் நம் கடமையை நாம் செய்து இறைவனிடம் கருணை பெறுவோம் ,இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கட்டுரையை நான் பப்ளிஷ் பண்ணலாமா சகோ

    பதிலளிநீக்கு
  3. ஸலாம் சகோ...

    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    கட்டுரையை தாராளமாக மீள்பதிவு செய்து கொள்ளுங்கள்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு