ஞாயிறு, 1 மே, 2011

கைவெட்டு வழக்கில் என்.ஐ.ஏவின் தகவல்

கைவெட்டு வழக்கில் தலைமறைவானவர்கள் பற்றிய அறிக்கையை வெளியிட கொச்சி நீதிமன்றம் தேசிய விசாரணை கமிஷன் (NIA) விடம் ஆணையிட்டுள்ளது.
முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்தி கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்


 இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி உயர்நீதிமன்றம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய விசாரணை கமிஷன் (NIA) விடம் இவ்வழக்கின் விசாரணையை ஒப்படைத்தது. நீதிபதி எஸ். விஜய்குமார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் பற்றிய அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏவிடம் கேட்டுக்கொண்டார்.



ஹைதராபாதில் இயங்கி வரும் இந்த என்.ஐ.ஏவின் கிளை குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் குற்றவாளிகளாக கருதப்பட்ட பலர் வெளிநாடுகளுக்குச்சென்று விட்டதாகவும், மேலும் சிலர் தமிழகத்தின் பல நகரங்களிலும், ஹைதராபாத் நகரத்திலும் தலைமறைவாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையின் உதவியை நாடுவதாக தெரிகிறது.

கடந்த வருடம் 2010 ஜுலை மாதம் 24ஆம் தேதி அன்று தொடுபுழாவில் உள்ள நியு மேன் கல்லூரியின் பேராசிரியர் டி.ஜே. ஜோசப்பின் கை மர்ம கும்பலால் வெட்டப்பட்டது. இந்த சம்பவம் கேரளா மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகத்திலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முஹம்மது நபியைப் பற்றி தறைக்குறைவாக கேள்வித்தாள் தயாரித்ததால் இத்தைகைய சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.



சிறைச்சாலையில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்
சர்ச்சைக்குறிய கேள்வித்தாள் தயாரித்ததற்காக ஜோசப் மீது வழக்கு தொடரப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பெயிலில் வெளியே வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது குடும்பத்தோடு தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது கைவெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.


இந்த பிரச்சனைக்குப்பிறகு பிற மத மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த முதலில் விசாரித்த கேரள காவல்துறையினர் சில இளைஞர்களை தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்தது.  அதே போன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் தான் இதை செய்தார்கள் எனக்கூறி பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கடுமையான முறையில் விசாரணை நடத்தியது காவல்துறை. அது போன்று பாப்புலர் ஃப்ரண்டின் எல்லா அலுவலகங்களையும் சோதனை செய்து பொய்யான தகவல்களை பரப்பியது கேரள அரசாங்கம்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியத்தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் கூட இந்த வழக்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கிறது. எப்படியாவது பாப்புலர் ஃப்ரண்டை தடைசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் விஷமத்தனமான கருத்துக்களை கேரள அரசாங்கம் பரப்பியது.

"சத்தியம் வென்றே தீரும்" என்ற இறைவசனத்திற்கேற்ப உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்றும் அதை தடைசெய்ய முடியாது என்று கூறியது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!
கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி அன்று இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 54 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் 27 நபர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறுகிறது.

காவல்துறையின் விசாரணைய என்.ஐ.ஏ தொடரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எஃப்.ஐ.ஆர் காப்பியை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி என்.ஐ.ஏ தாக்கல் செய்திருந்தது.

தொடர்ந்து என்.ஐ.ஏ தனது விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  அனஸ் அஹமது அதே தொடுபுழா வார்டு தேர்தலில் சிறையில் இருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்த்ககது.

செய்தி: முத்து
Source: http://harbour-popularfront.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக