சனி, 7 மே, 2011

ஸ்கூல் சலோ / பள்ளி செல்வோம்


புது டில்லி மே 01 :தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்வதை உறுதிசெய்துகொள்ள பாப்புலர் ஃப்ரண்ட்டின் "ஸ்கூல் சலோ" அல்லது "பள்ளிக்கூடம் செல்வோம்" பிரசாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பல மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடத்தில் அதன் உள்ளூர் கிளைகள் களப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

போஸ்டர் மூலம் பிரச்சாரம் செய்வதுடன், வீடுவீடாக சென்று மாணவர்களை தேடி கணக்கெடுக்கும் பணிகள், அவர்களை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடும் உதவிகள், பாதியிலேயே படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுவது, கல்வி கற்க தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்குதல், அரசு கல்வி உதவித்தொகைகளை பெற்றுத்தர உதவிசெய்தல் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு தேவையான கல்வி விழிப்புணர்வு வகுப்புகள் ஆகிய பல்வேறு கல்விப்பணிகள் உள்ளூர் அளவில் நடைபெறும்.
கல்வியில் மிகவும் பிந்தங்கிய கிராமங்களை கண்டறிந்து இப்பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும். மாநில கமிட்டிகள் கண்டறிந்த குறிப்பிட்ட சில கிராமங்களை தொடர்ச்சியாக கண்காணித்து அவை "சர்வ ஷிக்சா கிராம்" அல்லது முழு கல்வி வளர்ச்சி பெற்ற கிராமமாக உருவாக்கப்படும்.

நன்கு படிக்கக்கூடிய ஏழை மாணவர்கள் ஏழ்மையின் காரணமாக கல்வியை பாதியில் விட்டு விடாமல் பார்த்துக்கொள்ள உள்ளூர் தனவந்தர்கள், அவர்களின் அனைத்து கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆவண செய்யப்படும்.
ஆறு வயது முதல் பதிநான்கு வயது வரை அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை எங்கின்ற கல்வி கற்கும் உரிமை சட்டமாக்கப்பட்டாலும், நிறைவேராத வாக்குறுதிகளில் ஒன்றாக இதுவும் இன்றளவில் உள்ளது. மத்திய மாநில அரசாங்கங்கள் அரசாங்க ஊழியர்களை மட்டுமே சார்ந்திராமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அரசியல் சாசன கடமையை நிறைவு செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

எல்லா ஊர்களிலும் தங்கள் பகுதிகளில் கல்வியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வெளியே எவரும் இல்லை என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும் என சிறுபான்மையினரின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
கடந்த சில வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ திட்டத்தை, மாணவர் சேர்க்கையின்போது செயல்படுத்தி வருகிறது. அடித்தட்டு மக்களுக்கான இந்த சேவை நல்ல பலனை கொடுத்துவருகிறது.

எனவே நலன் விரும்பிகள், சமூக சேவகர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளூர் சமுதாய தலைவர்கள் மற்றும் கொடைவள்ளல்கள் ஆகிய அனைவரும் பொறுத்தமான தருணத்தில் செய்யப்படும் இந்த பிரச்சார இயக்கத்திற்கு தங்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கேஎம் ஷரீஃப் அவர்கள் பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
Source: http://www.popularfrontindia.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக