ஞாயிறு, 1 மே, 2011

ஈராக்கில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடு, ஆனால் அமெரிக்காவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஈராக்கியர்களுக்கு???

  iraq_bigபாக்தாத்  : ஈராக்கின் பாராளமன்ற உறுப்பினர்கள் சதாம் ஹுசைனின் படையால் 1990 மற்றும் 1991 ற்கும் இடையில் நடந்த வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு இழப்பீடாக அமெரிக்க டாலர் 400 மில்லியன் வழங்க அனுமதி அளித்துள்ளது.இழப்பீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு எட்டியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டன்னிற்கும் பாகத்திற்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்மீது சட்டம் ஏற்றும் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 226 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் இழப்பீடு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளமன்ற உறுப்பினர் மொக்டதா அல் சதர் பாராளமன்றதிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஈராக் கடந்த 1990 ஆகஸ்ட் 2 ஆம் தேதி தனது அண்டை நாடான குவைத் மீது போர் தொடுத்தது. ஆனால் சர்வதேச ராணுவத்தின் தலை ஈட்டால் ஈராக் ராணுவம் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.அமெரிக்க கூட்டுப்படையின்
போர்தொடுப்பல் கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் ஹுசைனின் ஆட்சி முடிவுக்கு வந்தது.குவைத் போர் நடைபெற்ற சமயம் அமெரிக்க மக்கள் சிலரை சதாமின் ராணுவம் மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் மேலும் அதில் சிலர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்க அந்நாட்டு பாராளமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்க கூட்டு படை உலக நாடுகளின் எதிர்ப்பையும் ஐநாவின் கனடனதையும்  மீறி இராக்கில் அத்துமீறி நுழைந்து சதாமின் ஆட்சியை கைப்பற்றியது.மேலும் இராக்கில் அமெரிக்க கூட்டு படைகளால் கொல்லப்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களுக்கு இதுவரை ஈராக் அரசு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும்.மேலும் ஈராக் மக்கள் அமெரிக்க கூட்டு ராணுவத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி : தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக